கறவை மாடுகளில் நச்சுயிரி நோய்களின் அறிகுறிகள் மற்றும் அதன் தடுப்பு முறைகள்!!

 




கறவை மாடுகளில் நச்சுயிரி நோய்களின் அறிகுறிகள் மற்றும் அதன் தடுப்பு முறைகள்!!


கறவை மாடுகள் பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. பசுக்களுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களை பற்றி பண்ணையாளர்கள் அறிந்து வைத்திருப்பது மிகச்சிறந்ததாகும். பண்ணையார்கள் தினமும் காலையில் வெளிச்சத்தில் தமது பசுவை சிறிது நேரம் பார்வையிட வேண்டும்.


அதனுடைய நடவடிக்கைகளை உற்று கவனிக்க வேண்டும் ஏதாவது மாற்றம் தெரிந்தால் அது நோயின் ஆரம்பமாக இருக்கலாம். இதற்கு உடனடியாக அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மிக முக்கியமான ஒன்று நச்சுயிரி நோய்கள் அதாவது வைரஸ் நோய்கள்.



நச்சுயிரி நோய்கள் (வைரஸ்நோய்கள்)


1. கோமாரி நோய்


2. வெக்கை நோய்


3. பசு அம்மை நோய்


1. கோமாரி நோய்


இரட்டை குளம்பு உள்ள எல்லா கால்நடைகளுக்கும் இந்நோய் வரும். கால்நடைகள் இறப்பது இல்லை என்றாலும் பால் உற்பத்தி குறைந்து விடும். பாதிக்கப்பட்ட பசுவும் மீண்டும் சினைப்படாமல் போகும்.


அறிகுறிகள்


கடுமையான காய்ச்சல் இருக்கும் (105 F), திடீரென்று பால் உற்பத்தி குறையும். மூச்சு இரைத்து வாங்கும், கால் குளம்புகள், வாய், நாக்கு, உதடு, மேல்தாடை பகுதியில் கொப்புளம் உண்டாகும்.


வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டிருக்கும், முடிகள் உதிர்ந்து பெரும் முடி வளர்ந்து காணப்படும், கால்களை அடிக்கடி உதறும்.


தடுப்பு முறைகள்


கன்று பிறந்த நான்கு மாதங்களில் முதல் தடுப்பூசி போடப்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் போட வேண்டும்.


ஒரு வருட வயதில் இருந்து ஓர் ஆண்டிற்கு இரண்டு முறை போட வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒன்றும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஒன்றும் போட வேண்டும்.



2. வெக்கை நோய்


இது ஒரு கொள்ளை நோயாகும். கடும் காய்ச்சல் ஏற்படும். கெட்ட நாற்றத்துடன் கூடிய சாணம் வெகு தூரம் வரை பீய்ச்சியடிக்கும். சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படும். இந்நோய் நமது நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இதனால் இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.


3. பசு அம்மை நோய்


இது எளிதில் பரவக்கூடிய தொற்று நோயாகும், காய்ச்சல் ஏற்படும். மடியிலும், காம்புகளிலும் சிவப்பு புள்ளிகள் தோன்றி அவை அம்மைக் கொப்புளங்களாக மாறும்.


தடுப்பு முறைகள்


பொதுவான முறைகளை பின்பற்ற வேண்டும். அம்மை கொப்புளங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரில் கழுவி, போரிக் ஆசிட் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி விட வேண்டும்.


தகவல் வெளியீடு


சி.சக்திவேல், மின்னஞ்சல் : duraisakthivel999@gmail.com,

கைபேசி எண்: 77087 27250,



ச.பாலமுருகன், மின்னஞ்சல் : sbala512945@gmail.com,

கைபேசி எண்: 80722 10944,

அண்ணாமலை பல்கலைக்கழகம்,சிதம்பரம்.

 

மேலும் படிக்க....


கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்ய வாய்ப்பு!


மாடுகளில் சினை பிடிக்காமை மற்றும் அதன் மேலாண்மை பற்றிய முழு தொகுப்பு!!


யாருக்கும் தெரியாத சில யுக்திகள்! கோழிப் பண்ணையில் லாபம் ஈட்டுவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments