தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!உருவாகிறது 4-வது புயல் சின்னம்!!




தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!உருவாகிறது 4-வது புயல் சின்னம்!!


வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வடகிழக்குப் பருவமழையாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்தது.


கணிப்பு


இந்நிலையில் வங்கக்கடலில், புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இது, இலங்கைக்கும், தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:



கனமழை


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். தென்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.


24.11.21 கனமழை


ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.


25.11.21 -26.11.21


கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.


சென்னை


சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.


புதிய காற்றழுத்தத் தாழ்வு


நகரின் சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

 


இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


4-வது புயல் சின்னம்


வடகிழக்கு பருவமழை காலத்தில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நான்காவது புயல் சின்னமாகும். இந்த தாழ்வு பகுதியால், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

மேலும் படிக்க....


தமிழகத்தை நெருங்கும் தாழ்வுப்பகுதி ரெட் அலேர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!


சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தகவல்!!


வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 மாவட்டங்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments