Random Posts

Header Ads

வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 மாவட்டங்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல்!!

 


வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 மாவட்டங்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல்!!


வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தொடரும் கனமழை


வடகிழக்குப் பருவமழை ஒருபுறம் என்றால், வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மறுபுறம் என தமிழகத்தின் பல மாவட்டங்களை கனமழைத் துவம்சம் செய்து வருகிறது.


சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவாக மாறிப்போன நிலையில், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியிருக்கின்றன. அப்பாடா என மக்கள் மூச்சு விடுவதற்குள் அடுத்தடுத்து தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ளன.


இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது



அடுத்துடுத்து தாழ்வு


குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. இதுதவிர மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளா, தென் கர்நாடகா, மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை (4. 5கி.மீ உயரம் வரை) நிலவுகிறது.


கனமழை


இதன் காரணமாக, தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பின்வரும் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி.


மீனவர்களுக்கான எச்சரிக்கை


அரபிக்கடல் பகுதிகள்


கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ந் தேதி தொடங்கியது. அதில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

 


அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடதமிழகம் நோக்கி கடந்த 10ந் தேதி நகர்ந்து வந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது.


கடந்த 11ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது மிக கனமழை கொட்டியது. எனவே சென்னை நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சென்னை மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதன் பிறகு மழை சற்று ஓய்ந்ததால் நிலைமை சீரடைந்து வந்தது.


இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்டும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.



இது சம்பந்தமாக தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், அந்தமான் அருகே புதிதாக உருவாகி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இருக்கிறது. அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. வருகிற 17-ந் தேதி அளவில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடைப்பட்ட இடத்தை நோக்கி வரும். 18ந் தேதி கரையை கடக்கும்.

 

மேலும் படிக்க....


கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ரூ.2,10,000/-க்கான நிவாரண உதவிகளை வழங்கினார்!!


புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி- அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது!


புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments