வெள்ளத்தால்
பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!
தமிழகம் முழுவதும்
கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 2 முறை ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தமிழ்நாடு முழுவதும்
வெள்ளக்காடானது. கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்
வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
மேலும், டெல்டா
மாவட்டங்களிலும் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய
பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.
இது தொடர்பாக ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான இக்குழுவில் அமைச்சர்கள்
தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர். அமைச்சர்கள் குழுவினர் கடந்த 12ந் தேதி தஞ்சாவூர்
சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.
மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் எவ்வளவு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்தது? அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்ற விவரங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர்.
அதன் பின் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி சேத விவரங்களை கேட்டனர்.
பின்னர் அவர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்களை
பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும்
சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
நாகை, மயிலாடுதுறை,
தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வில்
ஈடுபட்டது. இதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர்
மாவட்டங்களில் வெள்ள சேதத்தை பார்வையிட்டார்.
அமைச்சர்கள்
குழு நடத்திய ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 68,000 ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில்
பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர்கள் குழுவினர் கடந்த 2 நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சேத மதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்தது. பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
வடகிழக்கு பருவமழையால்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்
என முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையினால் (North East Monsoon) ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆறு
அமைச்சர்கள் அடங்கிய குழு மீதான ஆலோசனைக்கு பிறகு வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்
அறிவித்துள்ளார்.
நிவாரணம்
அறுவடைக்கு
தயாராக இருந்த குறுவை - கார் - சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில்
விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
நடப்பு சம்பா
பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஏதுவாக,
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருள்கள்
வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால்
மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை
சரி செய்ய ரூ.300 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க....
மழையால் பயிர் பாதித்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்! வேளாண்துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...