சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 




சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தகவல்!!


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளில் மேற்கு திசை நோக்கி நகர்கிறது.


இது வருகிற 18ந் தேதி தெற்கு ஆந்திரா- வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (17ந் தேதி) டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும். ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.


18ந் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யும். 


சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.


19ந் தேதி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.



20ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்கள் புதுவை, காரைக்கால், பகுதிகளில் லேசான மழை பெய்யும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.


 

மேலும் படிக்க....


வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 மாவட்டங்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல்!!


புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி- அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது!


புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments