தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி? மற்றும் பயன்படுத்தும் முறை முழு விபரம் இதோ!!

 


தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி? மற்றும் பயன்படுத்தும் முறை முழு விபரம் இதோ!!


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தூதை கிராமத்தில் தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


தென்னை நார்க்கழிவு


தேங்காய்களை உரித்த பிறகு மட்டைகளை ஊறவைத்து கயிறு தயாரிக்கும் போது வெளிப்படும் துகள்களே நார்க்கழிவு ஆகும். இதில் லிக்னின், பென்டோசான், ஹெக்சோசான் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இந்த வேதிப்பொருட்கள் நார்க்கழிவை மக்காமல் தடுக்ககூடியவை. இதை தவிர, பயிருக்குத் தேவையான பேருட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துகளும் இதில் உள்ளது. இதைக் கீழே குறிப்பிட்ட முறையில் மக்க வைத்தால் நல்ல எருவாக மாற்றலாம்.



மக்க வைக்கும் முறை


ஒரு டன் தென்னை நார்க்கழிவை மக்க வைக்க 5 கிலோ யூரியா மற்றும் 5 புட்டிகள் புளுரோட்டஸ் காளான் வித்துக்கள் தேவை. ஐந்து அடி நீளமும் , மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு இடத்தை நிழலுக்கு அடியில் தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குறிப்பிட்ட இடத்தில் 100 கிலோ நார்க்கழிவை ஒரே சீராக பரப்ப வேண்டும். 


இந்த கழிவு படுக்கை மேல் ஒரு புட்டி பூஞ்சாண வித்துகளை தூவி விடவேண்டும். அதன் மேல் அடுத்த 100 கிலோ தென்னை நார்க்கழிவை பரப்பிவிட்டு 1 கிலோ யூரியாவை தூவ வேண்டும். பின்பு அதன் மேல் 100 கிலோ நார்க்கழிவு, யூரியா என அடுத்தடுத்து 10 அடுக்குகள் போட்டு எப்போதும் ஈரம் உணரும் வகையில் தண்ணீர் தெளித்து 30 நாட்கள் வரையில் மக்க வைக்க வேண்டும். 


30 வது நாள் முடிவில் நார்க்கழிவு மக்கி கருமை நிறமாக மாறியிருக்கும், மக்கிய தென்னை நார்க்கழிவின் கொள்ளளவும் பாதியாகக் குறைந்து விடும். இதை உடனடியாகவோ, சேமித்து வைத்தோ தேவைப்படும் போது இடலாம்.



பயன்கள்


நார்க்கழிவில் உள்ள லிக்னின் மண்ணில் சேர்ந்து மக்கி மண்ணின் வளத்திற்கு அடிப்படை பொருளான ‘மண் மக்கு அமைய வழி செய்கிறது. மண்ணில் காற்றோட்டம், நீர் ஊடுருவும் திறன், நீர்பிடிப்புத்திறன் ஆகியன மேம்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. மண்ணில் ஈரத்தைக் காத்து நீர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை குறைக்கிறது.

 

மானாவாரி நிலங்களில் பருவமழைக்காலங்களில் அதிக மழைநீரை உறிஞ்சி மண்ணின் ஈரத்தன்மையை அதிகப்படுத்துவதால் பயிர்களுக்கு நீண்ட நாட்கள் நீர் கிடைக்க வழி செய்கிறது. கரிசல் நிலங்களில் ஏற்படும் வெடிப்பு குறைகிறது. 


தென்னை நார்க்கழிவு அதன் எடையைப் போல் இருமடங்கு நீரைப்பிடித்து வைப்பதால் பயிர்கள் வறட்சியை ஓரளவு தாங்கி வளர்கிறது. களர் உவர் நிலங்களை திருத்தவும், நில வளத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.


பயன்படுத்தும் முறை


நெல் தானிய வகைகள், பயறு காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு மக்கிய தென்னை நார்க்கழிவு நல்ல இயற்கை உரமாக பயன்படுகிறது. (தழைசத்து 1.06 சதவீதம், மணிசத்து 0.06 சதவீதம் சாம்பல் சத்து 1.20 சதவீதம்) ஒரு எக்டருக்கு 125 டன் மக்க வைத்து தென்னை நார்க்கழிவை கடைசி உழவிற்கு முன்பாக நிலத்தின் மீது சீராக தூவி விட்டு உழுது விட வேண்டும். 



களர் நிலங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவேடும் ஜிப்சத்தோடும் ஒரு எக்டருக்கு 10 டன் மக்கிய தென்னை நார்க்கழிவு இடும்போது மண்ணின் காரத்தன்மை குறைகிறது. 


புன்செய் மற்றும் மானாவாரி நிலங்களுக்கு நிலப்போர்வையாகப் பயன்படுகிறது. எனவே தென்னை நார்க்கழிவை மக்கவைத்து நல்ல எருவாக்கி பயிர்களுக்கு இடுவதால் வறட்சியின் பாதிப்பை குறைக்கலாம் மற்றும் பயிருக்கு தேவையான பேரூட்ட சத்துகளோடு நுண்ணூட்ட மற்றும் இடைநிலை சத்துக்களும் மக்கிய தென்னை நார்க்கழிவில் உள்ளதால் இதை பயிருக்கு இயற்கை உரமாக பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.


மேலும் படிக்க....


சணல் அலங்காரப் பொருள் உற்பத்தி மற்றும் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!


மாட்டுச் சாணம் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் புதிய தொழில்! செழிப்பான வருமானம்!!


மண்ணின் வளத்தை அதிகரித்து அதிக மகசூல் பெற பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments