பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது! ஆட்சியர் தகவல்!!

 


பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது! ஆட்சியர் தகவல்!!


மாவட்ட அறிவிப்பு


விருதுநகர் மாவட்டத்திலுள்ள பத்து வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரால் 31.08.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.


அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் துனை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில்,



சிறப்பு முகாம் நடத்திட மண்டல துணை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்ஆகியோர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்து கணினியில் எளிய திருத்தங்கள் மேற்கொண்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற பின்வரும் வழிவகைகளை பின்பற்றி பட்டா மாற்ற சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


பத்து வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்


இதன்படி 26.11.2021 அன்று கீழ்கண்டவாறு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சிவகாசி வட்டம் சிவகாசி வெள்ளூர் கிராமம் நாள்: 26.11.2021, அருப்புக்கோட்டை வட்டம் கீழ்க்குடி கிராமம் நாள்: 26.11.2021, விருதுநகர் வட்டம் செங்குன்றாபுரம் கிராமம்: 26.11.2021, காரியாபட்டி வட்டம்,



ஆவியூர் கிராமம் நாள்: 26.11.2021, திருச்சுழி வட்டம் உ.கிடாக்குளம் கிராமம் நாள்: 26.11.2021, சாத்தூர் வட்டம் பேரையம்பட்டி கிராமம் நாள்: 26.11.2021 ராஜபாயைம் வட்டம மேலப்பாட்டம், கரிசல்குளம் கிராமம் நாள்: 26.11.2021,


வெம்பக்கோட்டை வட்டம் கீழராஜகுலராமன் கிராமம் நாள்: 26.11.2021, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வெங்கடேஸ்வராபுரம் கிராமம் நாள்: 26.11.2021, வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமம் நாள்: 26.11.2021.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


பட்டா பெற தேவையான ஆவணங்கள்


1. பட்டா விண்ணப்பம் (பட்டா மனு),


2. சொத்து பத்திரத்தின் நகல்,


3. சொத்து உரிமையாளர் ஆதார் அட்டை நகல்,


4. குடும்ப அட்டை நகல்.



மாவட்ட ஆட்சியர் தகவல்


இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க....


மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து பிரதமர் மோடி அறிவிப்பு!! விவசாயிகள் மகிழ்ச்சி!!


PM Kisan: 10வது தவணையுடன் மேலும் மூன்று வசதிகள்! 2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாய்!


கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்ய வாய்ப்பு!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments