Random Posts

Header Ads

தமிழகத்தை நெருங்கும் தாழ்வுப்பகுதி ரெட் அலேர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!



தமிழகத்தை நெருங்கும் தாழ்வுப்பகுதி ரெட் அலேர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!


வட தமிழக பகுதியைக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று நெருங்க உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நெருங்கும் தாழ்வுப்பகுதி


இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கக்கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. 


அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது.



18.11.21 அதி கனமழை


இந்த நிகழ்வுகள் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.


எனவே மேற்சொன்ன மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதி கனமழை என்றால், ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகும்.


கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.


மிக கனமழை


செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழை பெய்யக்கூடும்.



சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதில் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

 

19.11.21 மிக கனமழை

 

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.


சேலம், தருமபுரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


20.11.2021 கனமழை


திருவள்ளுர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.



சென்னை பரவலாக மழை

சென்னையில் பரவலாக இன்று மழை பெய்யும்.ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே 2 முறை பெய்த கனமழையின்போது, தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த அளவுக்கு மழை பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.


ஆனால் இந்த முறை வட தமிழகப் பகுதியை நோக்கி வரும் தாழ்வுப்பகுதி பாதையில் சென்னை சரியான திசையில் இருப்பதால், பரவலாக மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.


பிற்பகலில் மழை


அதிலும் குறிப்பாக காலையில் மழை சற்று குறைவாக காணப்பட்டாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க....


சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தகவல்!!


வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 மாவட்டங்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல்!!


புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி- அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments