ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்! வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!!

 


வரும் 30ம் தேதிக்குள் ராபி பருவ மக்காச்சோள பயிர் காப்பீடு செய்யலாம்! வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!!


விருதுநகர் மாவட்டத்தில், ராபி பருவ மக்காச்சோள பயிர் காப்பீடு செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே, விவசாயிகள் காலம் தாழ்த்தாது 30.11.2021-க்குள் மக்காச்சோள பயிர் காப்பீடு செய்து பயனடைய வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம் 29,000 ஹெக்டேரிலும், கம்பு 550 ஹக்டேரிலும், துவரை 420 ஹெக்டேரிலும் மற்றும் பருத்தி 15,740 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், தற்போது மிதமான முதல் கன மழை பெய்து வரும் நிலையில் மக்காச்சோளம், கம்பு, ராகி, துவரை மற்றும் பருத்தி பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.



பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.411/-, கம்பு பயிருக்கு ரூ.139/-, ராகி பயிருக்கு ரூ.155/-, துவரைக்கு ரூ.199/- மற்றும் பருத்தி பயிருக்கு ரூ.452/- என நிர்ணயம் செய்யப்பட்டு, பயிர் காப்பீடு நடைபெற்று வருகிறது. மக்காச்சோளம், கம்பு, ராகி, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் 30.11.2021.


எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக மக்காச்சோளம், கம்பு, ராகி, துவரை மற்றும் பருத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் திருந்தியமைக்கப்பட்ட பயிர்க் காப்பீடு திட்டம் அக்ரிகல்ச்சுரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி (இந்தியா) லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, 


வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.



எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ 


உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி தங்களது உளுந்து மற்றும் பாசிப்பயறு வகை பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு ச.உத்தண்டராமன், வேளாண்மை இணை இயக்குநர், விருதுநகர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க....


பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது! ஆட்சியர் தகவல்!!


PM Kisan: 10வது தவணையுடன் மேலும் மூன்று வசதிகள்! 2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாய்!


நெல், வெங்காய பயிர்களுக்கு டிசம்பர் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

Post a Comment

0 Comments