ரூ.4000 ஆயிரம் மதிப்பிலான தென்னை மரம் ஏறும் கருவிக்கு 100% மானியம்! வேளாண்துறை அறிவிப்பு!!

 


ரூ.4000 ஆயிரம் மதிப்பிலான  தென்னை மரம் ஏறும் கருவிக்கு  100% மானியம்! வேளாண்துறை அறிவிப்பு!!


மதுரையில் உள்ள டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களைப் பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


100 % மானியம்


வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களைப் பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தெரிவித்ததாவது,


டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் அட்மா திட்டத்தில் இந்த கருவி வழங்கப்படுகிறது.



மானியம் பெறுவது எப்படி?


1. ரூ.4000 ஆயிரம் மதிப்பிலான இந்த மரம் ஏறும் கருவியை விவசாயிகள் வாங்க வேண்டும்.


2. முழு விலை செலுத்தி இயந்திரத்தைப் பெற்றபின் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.


3. இதற்கு, இயந்திரம் வாங்கிய பின் ஆதார் எண், கம்ப்யூட்டர் சிட்டா, வங்கி புத்தக நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.


4. அவை சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியத்தொகை வரவு வைக்கப்படும். 


5. முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.



கருவியின் முக்கியத்துவம்


தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம்.


இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, மரத்தில் ஏறும் கருவி பெரிதும் உதவியாக இருக்கும்.





மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் இந்தக் கருவியைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக மரத்தின் உச்சிக்கு சென்று காய்களைப் பறிக்க முடியும்.


30 முதல் 40அடி உயரமுள்ள மரத்தில் சுமார் 15 நிமிட நேரத்துக்குள் ஏறி, இறங்கலாம். அவ்வாறு ஏறுவதற்கு எளிமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் 50 முதல் 60 மரங்கள் வரை இந்தக்கருவியைப் பயன்படுத்தி ஏற முடியும்.


மேலும் படிக்க....


பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது! ஆட்சியர் தகவல்!!


நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான நெல் விதை உற்பத்திக்கான வழிமுறைகள்!!


கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்ய வாய்ப்பு!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments