நெல் வரப்பில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து கூடுதல் லாபம் ஈட்ட வழிமுறைகள்!!
திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்துவருகிறது. மழை சற்று குறைந்தவுடன் நெல் வயல்களில் உள்ள வரப்புகளில் வரப்பு பயிராக துவரை, உளுந்து, பாசிப்பயிறு மற்றும் தட்டைப்பயிறு ஆகிய பயறு வகை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செலவில்லாமல் வீட்டுக்கு தேவையான உளுந்து, துவரை, பாசிப்பயிறு மற்றும் தட்டைப்பயிறு வகைகளை உற்பத்தி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.
மேலும் வரப்பு பயிர் மூலம் நெல் பயிருக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
பயறு வகை பயிர்களின் வேர் முடிச்சுகள் மூலம் வளிமண்டல தழைச்சத்தினை மண்ணில் நிலை நிறுத்தி,
நெல் வயலின் மண்வளத்தை அதிகப்படுத்துகிறது. வரப்பு தூய்மையாக களைகள் இல்லாமல் பராமரிக்கப்படுவதால்
களைகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
வரப்பில் சாகுபடி செய்யப்படும் பயறுவகை பயிர்களில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் தோன்றும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்பட்டு, இப்பொறி வண்டுகள் நெற்பயிரினைத் தாக்கும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தும்.
மேலும் பயறுவகை பயிர்களில் மஞ்சள் நிற
வண்ண மலர்களால் ஊண் உண்ணிகளான குளவி இனங்கள், ஒட்டுண்ணிகள் கவரப்பட்டு அவைகள் நெற்பயிரினை
தாக்கும் தண்டு துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டு புழு ஆகியவைகளை கட்டுப்படுத்தும்.
நெல் வரப்பில் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதற்கேற்ற ரகங்களையும், முளைப்புதிறன் மிக்க தரமான விதைகளையும் பயன்படுத்தவேண்டும்.
துவரையில் குறைந்த வயதுடைய வம்பன்-1, பிஎஸ்ஆர்-1, எபீகே-1, வம்பன்-3 ஆகிய ரகங்களும், உளுந்து பயிரினை பொறுத்தவரை டீ-9, வம்பன்-3, எடீடி-5, வம்பன்-4, வம்பன்-9, வம்பன்-10 வம்பன்-11, கோ-6 ஆகிய ரகங்களும் பச்சை பயிரினை பொறுத்தவரை வம்பன்-1, வம்பன்-4, கோ-8, ஆகிய ரகங்களும்
தட்டைப்பயிரினை பொறுத்தவரை கோ-6,
பையூர்-1, வம்பன்-2, ஆகிய ரகங்களும் வரப்பு பயிராக ஏற்ற ரகங்களாகும். நெல் வரப்பில்
ஒரு எக்டருக்கு 2-3 கிலோ உளுந்து, பாசிப்பயிறு அல்லது தட்டைப்பயிறு விதைகளை வரப்பின்
ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் விதைக்கலாம். துவரை பயிரினை பொருத்தமட்டில்
2 கிலோ விதையினை வரப்பின் ஓரத்தில் விதைக்கலாம்.
வரப்பில் விதைக்கும்
பயறு வகைப்யிர்களின் ரகத்தை அறிந்த விவசாயிகள் விதையின் தரத்தை அறிந்து விதைப்பது மிகவும்
அவசியம். இந்திய குறைந்தபட்ச விதைச்சான்றுத் தரங்களின்படி பயறு வகைப்பயிர்களுக்கு
75 சதவீதம் முளைப்புத்திறன், 98 சதவீதம் புறத்தூய்மை, 9.0 சதவீதம் ஈரப்பதம் மற்றும்
பிற இன பயிர்கள், ஒரு விதைக்கு 5ம், சான்று விதைக்கு ஒரு கிலோவிற்கு 10ம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் விதைகளின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற இரக விதைக்கலப்பு ஆகியவற்றை மிக துல்லியமாக அறிந்து கொள்ள விவசாயிகள் விதை பரிசோதனை மேற்கொள்ள துவரை பயிராயின் 30 கிராம் துவரை விதையும், உளுந்து பயிராயின் 150 கிராம் உளுந்து விதையும் மற்றும் பாசிபயிருக்கு 120 கிராம்,
பாசிப்பயிறு விதை மாதிரியுடனும் ஒரு மாதிரிக்கு ரூ.30 கட்டணத்துடன்
விதை பரிசோதனை நிலையம், பெரியமில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் அணுகி
பயன்பெற அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் விவசாயிகள்
நெல் வரப்பில் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருமானமும், நெற்பயிரில் இயற்கைமுறை
பூச்சிக்கட்டுப்பாட்டு முறையினை ஊக்குவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை, திருவாரூர்,
விதைப்பரிசோதனை நிலையம், து.சிவவீரபாண்டியன், தஞ்சை சரக விதை பரிசோதனை அலுவலர், ச.கண்ணன்,
மூத்த வேளாண் அலுவலர், க.புவனேஸ்வரி, வேளாண் அலுவலர் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க....
PM Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி வெளியிடும் அரசு!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...