நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற வழிமுறைகள்!! அதிக மகசூலும், கூடுதல் லாபமும் விவசாயிகள் ஈட்ட எளிய வழி!!
இயற்கை
வேளாண்மையில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்
இயற்கை
வழி வேளாண்மையில் நெல் சாகுபடி தொழில்
நுட்பங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டால், அதிக மகசூலும், கூடுதல்
லாபமும் விவசாயிகள் ஈட்ட முடியும்.
இதுகுறித்து
தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
அதிக
மகசூல்
தமிழ்நாட்டில்
நெல் பயிரானது மிகவும் முக்கியமான உணவுப் பயிராக இருந்து வருகிறது. விவசாயிகள் அதிகளவில் மகசூல் கிடைக்க வேண்டி, அதிகளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துகிறார்கள்.
சுற்றுச்சூழல்
மாசுபாடு
இதன் விளைவாக மண்வளம் மற்றும் மகசூல் குறைதல், பூச்சிக் கொல்லி மருந்துக்கு எதிர்ப்பு தன்மை, நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் சுற்றுப்புறசூழல் மாசுபடுதல் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை ஒரு சிறந்த வழிமுறையாக உள்ளது.
இயற்கை
சாகுபடி
இயற்கை
சாகுபடி என்பது சாகுபடி செய்யும்பொழுது இயற்கை வளங்களை அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல், இயற்கை சார்ந்த உரங்கள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை களைக் கையாள
வேண்டும்.
கூடுதல்
விலை
இயற்கை
வேளாண்மையில் உற்பத்தி செய்யப் படும் பொருளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதால் பெருநகரங்களில் இயற்கை வேளாண்மை விளை பொருட்களுக்கான தனியாக
கடைகள் செயல்பட்டு வருவதோடு, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு
மக்கள் தயாராக இருக்கின்றனர்.
மண்
வளம் பாதுகாப்பு
எனவே இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமல்லாமல் நமது மண் வளத்தையும் பாதுகாக்கப்படும். இயற்கை வேளாண்மையில் நல்ல தரமான மற்றும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள பாரம்பரிய ரகங்களை உபயோகப்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதோடு கூடுதல் விலையும் பெற முடியும். இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகிக்க வேண்டும்.
விதை
நேர்த்தி செய்தல்
விதை
நேர்த்தி செய்வதற்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து உயிர் உரங்கள் மற்றும் தாவரம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
ஒரு
கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் 10 கிராம் பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் என்ற அளவில் விதை
நேர்த்தி செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் இளம் பயிரில் நோய்
எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
உழவின்போது
தொழுஉரம் இடுதல்
நடவு
வயலில் கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன்
தொழுஉரம் இட வேண்டும் அல்லது
நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்
பூண்டு, சணப்பை, கொழுஞ்சி விதைகளை 20 கிலோ விதைத்து பிறகு
45 நாட்கள் கழித்து பூக்கும் தருணத்திற்கு முன்பு மடக்கி உழுதல் வேண்டும்.
நடவு
செய்யும் போது செய்யவேண்டியவை
அவ்வாறு
செய்யும் போது சுமார் 10 டன்கள்
வரை பசுந்தாள் உரம் மற்றும் சூடோமோனாஸ்
உயிர் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற
அளவில் 20 கிலோ தொழு உரத்துடன்
கலந்து நடவு வயலில் நடவு
நடுவதற்கு முன்பாக இட வேண்டும்.
நடவுயலில்
அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட் மற்றும் பாக்டீரியா 10 பாக்கெட் ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன்
கலந்து இடவேண்டும்.
அசோலா
உயிர் உரத்தினை ஒரு ஏக்கருக்கு 100 கிலோ
என்ற அளவில் நடவு செய்த மூன்று
முதல் ஐந்து நாட்களுக்குள் விட்டு நன்கு வளர்ந்த பின் கோனோவீடர் மூலம்
நன்கு அமைக்கப் படுவதால் வயலுக்கு உரமாக கிடைக்கிறது.
வேர்
வளர்ச்சி துரிதப்படுத்த வேண்டும்
கோனோ
கருவிகள் மற்றும் ரோட்டரி கருவிகளைக் கொண்டு 15 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை களை
எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு மண் காற்றோட்டம் அடைவதுடன்
வேரின் வளர்ச்சி துரிதப்படுத்த படுகிறது.
வயலுக்கு
தேவையான மேலுரங்கள்
மேலும்
நடவு வயலில் மேலுரமாக ஒரு ஏக்கருக்கு வேப்பம்
புண்ணாக்கு 50 கிலோவை, பயிர் துளிர்க்கும் தருணத்தில் இட வேண்டும்.
மேற்கூறிய
அனைத்து எளிய இயற்கை தொழில்
நுட்பங்களை மேற்கொண்டு, விவசாயிகள் பயன் அடைந்து தங்கள்
மண்வளத்தை பாதுகாக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
காரீப் பருவ சாகுபடி- புதியதாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!
PM கிசான்: திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் யார்? நன்மைகளைப் பெற தேவையான ஆவணங்கள் என்ன?
விவசாயிகள் புதியதாக பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!! வேளாண்மை இணை இயக்குநர் அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...