விவசாயிகள் புதியதாக பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!! வேளாண்மை இணை இயக்குநர் அறிவிப்பு!!


பயிர் காப்பீடு செய்ய உகந்த தருணம் இது


மதுரை மாவட்ட விவசாயிகள் உடனடியாக பயிர்களுக்குக் காப்பீடு செய்துப் பயனடையுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.


காரீப் பருவம் (Caribbean season)


வேளாண்மைத்துறை மூலம் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2021-22ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


காப்பீடு செய்ய அழைப்பு (Call for insurance)


இத்திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் பிர்க்கா அளவில் நெல், பாசிப்பயறு, உளுந்து தவிர்த்து பிற பயிர்களான மக்காச்சோளம், துவரை, நிலக் கடலை, பருத்தி, சோளம் மற்றும் கம்பு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அறிவிக்கை செய்யப் பட்ட பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.



பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் மற்றும் பயிர்க்கடன் பெறா விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யலாம்.


ஒரே விதமான பயிர்க் காப்பீடு (Uniform crop insurance)


கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை, பிரீமியத்தொகை மற்றும் அதற்கான மானியத்தொகை கிடைக்கும்.


மேலும், தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் செய்யலாம்.


தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)


1. முன்மொழிவு படிவம்


2. பதிவு விண்ணப்ப படிவம்


3. கிராம நிர்வாக அதிகாரி (வி..) வழங்கும் அசல் அடங்கல்


4. வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்


5. ஆதார் அட்டை நகல். போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


மக்காச்சோளம் (Corn)


ஏக்கருக்கு ரூ.24,750 ரூபாய் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதற்கான பிரிமியத் தொகை ரூ.495



 துவரை


துவரைக்கு ஏக்கருக்கு 341 ரூபாயை பிரிமியத் தொகையாகச் செலுத்தி, ஏக்கருக்கு 17,095 ரூபாயைப் பெறலாம்.


நிலக்கடலை (Groundnut)


நிலக்கடலைக்கு ஏக்கருக்கு 475 ரூபாயை பிரிமியத் தொகையாகச் செலுத்தி, ஏக்கருக்கு 23,750 ரூபாயைப் பெறலாம்.


பருத்தி (Cotton)


பருத்திக்கு ஏக்கருக்கு 400 ரூபாயை பிரிமியத் தொகையாகச் செலுத்தி, ஏக்கருக்கு 8,017 ரூபாயைப் பெறலாம்.


சோளம் (Corn)


சோளத்திற்கு ஏக்கருக்கு 243 ரூபாயை பிரிமியத் தொகையாகச் செலுத்தி, ஏக்கருக்கு 12,150 ரூபாயைப் பெறலாம்.


கம்பு (Rye)


கம்புக்கு ஏக்கருக்கு 251 ரூபாயை பிரிமியத் தொகையாகச் செலுத்தி, ஏக்கருக்கு 12,550 ரூபாயைப் பெறலாம்.



கடைசி தேதி (Deadline)


இந்த அத்தனைப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய வரும் 31.08.2021 தேதி வரைக் காலக்கெடு உள்ளது.


காப்பீடு செய்துகொள்ளக் குறுகிய கால அளவு மட்டுமே இருப்பதால் விவசாயிகள் காலதாமதமின்றி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.


தகவல் வெளியீடு


.விவேகானந்தன்


மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்


மேலும் படிக்க....


பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீடு!! எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!!


பயோஃப்ளாக் டெக்னிக் மீன் வளர்ப்பு ஆண்டுக்கு ரூ. 25,000 முதலீடு! ரூ .2 லட்சம் வருமானம்!!


கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விவசாய வணிக யோசனைகள்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post