பின்விளைவுகளைத் தடுக்க மீன் அமினோ அமிலம் யூரியாவிற்கு மாற்றாக மீன் அமினோ அமிலம்!!


இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், மீன் அமினோ அமிலத்தைப் பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைப்பது உறுதி.


மீன் அமினோ அமிலம்


விவசாயிகள் தங்கள் பயிர்கள் நன்றாக செழிப்பாக அதிகளவில் பசுமையாக இருக்க வேண்டும். மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தழைச்சத்து உரங்களை அதிகளவில் பயன்படுத்து கின்றனர். அதிகப் பசுமை காரணமாக பூச்சித்தாக்குதல் ஏற்படும் நிலைமை மற்றும் மண் வளம் குறைதல் போன்ற பின் விளைவுகளை எதிர் கொள்கின்றனர்.



இந்த பின்விளைவுகளைத் தடுக்க மீன் அமினோ அமிலம் பெரிதும் பயன்படுகிறது. இதனை எளிதாக எந்த ஒரு அதிகளவில் செலவுகள் இன்றி விவசாயிகளுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உதவும் வகையில் எளிதாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம்.


மீனில் உள்ளப் புரதங்கள் நுண்ணுயிர் களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாகப் பிரிகின்றன. இதில் நைட்ரஜன் சத்து தழைச்சத்து அதிகம் காணப்படுகிறது.


தேவையான பொருட்கள்


5 கிலோ மீன் கழிவுகள் (மீன் மார்க்கெட்டில் இலவசமாக வாங்கி கொள்ளலாம்). மீன் கழிவுகள் கிடைக்கா விட்டால் முழு மீனைத் துண்டாக வெட்டி பயன்படுத்தலாம். 5 கிலோ நாட்டுச் சர்க்கரை () வெல்லம். பிளாஸ்டிக்வாளி ()டிரம்.


மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை


1. 5 கிலோ மீன் கழிவுகள் () முழு மீனைத் துண்டாக வெட்டிக் கொள்ளவும்.


2. 5 கிலோ நாட்டுச் சர்க்கரையை மீன் கழிவுகளுடன் சேர்க்க வேண்டும். (வெல்லம் எடுத்துக் கொண்டால் நன்றாகத் தூளாக்கிச் சேர்க்க வேண்டும்).



3. இரண்டையும் விகிதத்தில் (1:1) கலந்து பிளாஸ்டிக் வாளியில் காற்று புகாதவாறு நன்றாக மூடி நிழலில் வைக்க வேண்டும்.


4. சரியாக 30-40 நாட்களில் மீன் அமினோ அமிலம் தயாராகி விடும். இதிலிருந்து எவ்வித கெட்ட வாடையும் வராது.


5. அதாவது, பழ வாடை வரும் என்பதே மீன் அமினோ அமிலம் தயாரானது என்பதற்கு அறிகுறி.


6. இதனை வடிகட்டி 6 மாத காலம் வரைப் பயன்படுத்தலாம்.


7. தயாரித்த மீன் அமினோ அமிலத்தை 2-5 மி.லியை லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


8. இதனை நேரடியாகவும் மண்ணில் இடலாம் அல்லது தாவரத்தின் இலைகளில் தெளிக்கலாம்.


9. தாவரங்கள் திட வகை உரங்களை விட, திரவ உரங்களிலிருந்து ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சும்.


மீன் அமினோ அமிலம் பயன்கள்


1. பயிருக்கு தழைச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய யூரியாவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மீன் அமினோ அமிலத்தைப் பயன்படுத்தலாம்.


2. மீன் அமினோ அமிலம் 75% வளர்ச்சி ஊக்கியாகவும், 25% பூச்சி விரட்டியாகவும் செயல்படக்கூடியது.


3. இதனைப் பூக்கும் தருணத்தில் பயன்படுத்தினால், மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற்று பூக்கள் நன்றாக பூத்து காய்க்கும் திறன் அதிகரிக்கும்.



4. வேர் வளர்ச்சியை ஊக்குவித்தல், ஒளிச்சேர்க்கையை மேம்படுத்துதல், பயிர் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதால், அதிக மகசூல் கிடைக்கும். பயிர் விளைச்சலை10% - 40% அதிகரிக்க உதவும்.சுற்றுச்சூழலுக்கு உகந்த, விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவக் கூடியதாக இருக்கும்.


5. இதனை வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் தெளித்தால் மயில், முயல் மற்றும் எலி தொந்தரவு தெளித்த ஐந்து நாட்கள் வரை இருக்காது.


தகவல் வெளியீடு


. அக்ஸிலியா மேரி,

இளங்கலை வேளாண்மை 4ம் ஆண்டு,

அண்ணாமலை பல்கலைக்கழகம்.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கான 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!


கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஆடு வளர்க்கஇந்த மொபைல் செயலி அவசியம்!!


விவசாய மின்மோட்டர் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post