நாடு
முழுவதும் வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- கிசான்
ஸ்டோர் அமேசானின் அசத்தல் ஏற்பாடு!
நாடு
முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மலிவான
விலையில் விவசாய உபகரணங்களை வாங்க ஏதுவாக, கிசான் ஸ்டோர் என்பதை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது விவசாயிகள் பயன்பெறும்
முக்கியத் தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின்
பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க ஏதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் மானிய உதவி அளித்து வருகின்றன.
அது மட்டுமல்லாமல் விதைகள், நெல் ரகங்கள், விவசாய
உபகரணங்கள் ஆகியவற்றைக் மிகக்குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தையும் அவ்வப்போது அமல்படுத்தி வருகின்றன.
அமேசான்
புதிய முயற்சி
இந்நிலையில்
சற்று வித்தியாசமான முயற்சியாக, விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ளது அமேசான்
நிறுவனம். இதன்படி, டு முழுவதும் உள்ள
விவசாயிகள் அமேசான் ஈஸி ஸ்டோர்களில் தங்களுக்குத்
தேவையான விவசாய உபகரணங்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
அமேசான்
இந்தியா நிறுவனம் கிசான் ஸ்டோரை
அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகளை மேம்படுத்துதல் மற்றும் விவசாயத் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கத்துடன் இணைந்து கிசான் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்
நலத்துறை அமைச்சர் கடைத் திறப்பு
இந்தக்
கடையை விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி
வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர்,"நாடு முழுவதும் உள்ள
விவசாயிகள் விதைகள், பண்ணை கருவிகள் மற்றும் துணைக்கருவிகள், பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பல விவசாய விளைபொருட்களை
மலிவான விலையில், கூடுதல் வசதியுடன் அவர்களின் வீட்டுக்கே நேரடியாக (Doorstep Delivery)
கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
விவசாயிகளின்
வீட்டிற்கே டெலிவரி
கிசான்
ஸ்டோர் பற்றி அமேசான் நிறுவன அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்திய விவசாயத்திற்கு ஒரு புதிய அனுபவத்தை
இந்த கிசான் ஸ்டோர் வழங்கும்.
விவசாயிகளுக்கான
சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முதல் படியாக கிசான் ஸ்டோர் தொடங்கப்பட்டது. மேலும் ஒரே ஒரு பட்டனைக்
கிளிக் செய்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஆர்டர்களை வழங்கவும், அவர்களின் வீட்டுக்கே நேரடியாக கொண்டு செல்லவும் உதவும்.
நாடு
முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மலிவான
விலையில் விவசாய உபகரணங்களை வாங்க கிசான் ஸ்டோர் முக்கியத் தளமாக இருக்கும். ஆன்லைன் தளமான அமேசானில் நாடு முழுவதும் உள்ள
50,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமேசான் ஈஸி ஸ்டோர்களில் ஷாப்பிங்
செய்யலாம்.
கேஷ்
ஆன் டெலிவரி வசதி
அமேசான்
ஈஸி ஸ்டோர் (Amazon Easy Store) வசதியை அளிக்கும் உரிமையாளர்கள், "விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான பொருளை அடையாளம் காணவும், அமேசான் தளத்தில் கணக்கை உருவாக்கவும், ஆர்டர் செய்யவும், அதை வாங்குவும்" உதவுவார்கள்.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை அனைத்து விவசாயப் பொருட்ளையும் கிசான் ஸ்டோர் மூலம் வாங்கலாம்.
விவசாயிகள்
பொருட்களை வாங்கிய பிறகு, பணத்தை டெபாசிட் செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
அவர்கள் பணம் செலுத்த அனைத்து
வசதிகளும் உள்ளன. விவசாயிகள் நெட் பேங்கிங், யுபிஐ,
அமேசான் பே, டெபிட் மற்றும்
கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம். அதே
சமயம் Cash on Delivery
வசதியும் உள்ளது.
ஐந்து
மொழிகளில் அமேசான் ஈஸி ஸ்டோர்
தமிழ்,
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி விவசாயிகள் Amazon.in இல் ஷாப்பிங் (Shopping) செய்யலாம்.
மேலும் படிக்க....
100% நிதி விருப்பங்களை வழங்க கிசான் கார் திட்டம்! இனி ஒவ்வொரு விவசாயியும் காரில் பயணிக்கலாம்!
விவசாய நிலங்களில் நீடித்த நிலையான பசுமைப் போா்வை விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை மானியம்!
டிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு மானியம்: எவ்வாறு மானியம் பெறலாம் விண்ணப்பிக்கலாம்!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...