பசுமைப்
போர்வை திட்டம்-விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை மானியம்!
பெரம்பலூா்
மாவட்டத்தில் நீடித்த நிலையான பசுமைப் போா்வை திட்டத்தின் கீழ் மானியம் பெற
விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா
புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அரசுகள்
நிதி
விவசாய
நிலங்களில் நீடித்த நிலையான பசுமைப் போா்வை (2021- 2022) திட்டம் 60 சதவிகிதம் மத்திய அரசு, 40 சதவிகிதம் மாநில அரசு நிதியுடன் செயல்படுத்தப்பட
உள்ளது.
மாவட்டத்துக்கு
1,70,700 மரக்கன்றுகள்
இத்திட்டத்தில்
மாவட்டத்துக்கு
1,70,700 மரக்கன்றுகள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூா் வட்டாரத்துக்கு 32,700, ஆலத்தூா் வட்டாரத்துக்கு 45,000, வேப்பூா் வட்டாரத்துக்கு 48,000, வேப்பந்தட்டை வட்டாரத்துக்கு 45,000 மரக்கன்றுகள் வீதம் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
தேவைப்படும்
மரக்கன்றுகள் மாவட்ட வன அலுவலகத்தின் மூலம்
வழங்கப்படும். விவசாயிகள் மரக்கன்றுகளை வயலைச் சுற்றி பாா்டா் நடவு, குறைந்த இடைவெளி நடவு, அடா் இடைவெளி நடவு
முறையில் சாகுபடி செய்யலாம்.
பாா்டா்
நடவு முறை ரூ. 70 வரை மானியம்
பாா்டா்
நடவு செய்வதற்கு கன்று ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 70 வரை மானியம் வழங்கப்படும்.
4 ஆண்டுகள் பிரித்து, 40:20:20:20 என்ற விகிதாச்சாரத்தில் கன்றுகளின் எண்ணிக்கை
அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.
குறைந்த
இடைவெளி நடவு முறை ரூ.
28,000 வரை மானியம்
குறைந்த
இடைவெளி நடவு முறையில் 100 கன்றுகள்
நடவு செய்ய, தலா ஒன்றுக்கு ரூ.
70 மானியம் அல்லது 100 கன்றுக்கு மேல் 500 கன்றுக்குள் நடவு செய்வதற்கு ஹெக்டோ்
ஒன்றுக்கு ரூ. 28,000 வரை மானியம் 4 ஆண்டுகள்
பிரித்து, 40:20:20:20 என்ற விகிதாச்சாரத்தில் பிரித்து வழங்கப்படும்.
அடா்
நடவு முறை ரூ. 50 ஆயிரம்
வரை மானியம்
அடா்
நடவு முறையில் 500 கன்றுக்கு மேல் 1,500 கன்றுகளுக்குள் நடவு செய்தால் ஹெக்டோ்
ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை, இடைவெளி மற்றும்
கன்றுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மானியம், 4 ஆண்டுகளுக்கு 40:20:20:20 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படும்.
பயனற்ற நிலங்களில் நடவு
இம்முறையில்
மரக்கன்றுகள் நடவு செய்ய ஒரு
ஹெக்டேருக்கு மேலுள்ள விவசாயிகள் நீண்ட ஆண்டுகளாக சாகுபடி செய்யாமல், சாகுபடிக்கு பயனற்ற நிலையிலுள்ள நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தால், 20 ஆண்டுகளில்
வளமான நிலமாக மாற வாய்ப்புள்ளது.
மேலும்
விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை
தொடா்புகொள்ளலாம்.
மேலும் படிக்க...
டிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு மானியம்: எவ்வாறு மானியம் பெறலாம் விண்ணப்பிக்கலாம்!
விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி! ரூ .1.60 லட்சம் இலவச கடன்! 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி!!
அதிர்ச்சி தகவல்! PM Kisan நிதி உதவி பெற்ற 42 லட்சம் தகுதியற்ற பயனாளிகள்...!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த
லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர்
Time to Tips Family


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...