ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பயறு வகைகள் கொள்முதலுக்கு அரசு தயார்!


கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை


ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், விவசாயிகளிடம் இருந்து நேரடி யாக, துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்


இதுதொடர்பாக, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசின் வேளாண் பட்ஜெட்டில், பலன் தரும் பயறு உற்பத்தி திட்டம் அறிவிக்கப்பட்டது.இதன்படி, விவசாயிகளிடம் இருந்து, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக, 61 ஆயிரம் டன் துவரை, உளுந்து போன்ற பயறு வகைகள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல்


ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான'காரிப் பருவத்தில்' சாகுபடி செய்யப்பட்ட, உளுந்து, பாசிப்பயிறு போன்றவற்றை, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


இதற்காக, மாநில வேளாண்மை விற்பனை வாரியம், மாநில இணைப்பு முகமையாகவும்; ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், பிரதான கொள்முதல் நிலையங்களாகவும்; 'நாபெட்' நிறுவனம், மத்திய கொள்முதல் முகமையாகவும் செயல்படும்.


வளர்ச்சி பருவம்


நடப்பாண்டு பருவத்தில் 4,000 டன் உளுந்து, கிலோ 63 ரூபாய்; 3,367 டன் பச்சைப் பயறு, கிலோ 72.75 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஆதார விலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இவை, 12 சதவீத ஈரப்பதத்திற்குள் இருக்க வேண்டும்.



தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ள துவரை, அறுவடை முடிந்ததும் கொள்முதல் செய்யப் படும். கொள்முதல் எங்கே?துாத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் உள்ள, 31 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில், உளுந்து கொள்முதல் நடக்கும்.


விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்


சேலம், நாமக்கல், வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருது நகர், மதுரை மாவட்டங்களில் உள்ள, 17 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், அக்., 1 முதல், 90 நாட்கள், பாசிப்பயிறு கொள்முதல் நடக்கும்.



இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.


விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறுக்கான தொகை, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு, நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


மீன் வளர்த்து லாபம் ஈட்டுவது எப்படி? 25000 முதலீட்டில் லட்சங்களில் சம்பாதிக்கலாம்!


உழவர் சொத்து காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன? எவ்வாறு பயன்பெறுவது?


PM Kisan 10 வது தவணைக்கான பணம் எப்போது வரும்? 10 வது தவணையை வெளியிடுவதற்கான தேதி அரசு நிர்ணயித்துள்ளது!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post