புதிய மின்
மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!!
ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமாக
வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின் மோட்டார்
ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வேளாண் நிலம் மேம்பாட்டிற்காகப் பல்வேறுத் திட்டங்களை
அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக,
புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 2000 விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியமாக ரூ.2
கோடி தாட்கோ மூலம் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2021-2022 ஆம்
ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி
செல்வராஜ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
200 விவசாயிகளுக்கு
இதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தங்கள் வேளாண் நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 2000 விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியமாக வழங்கப்படும்.
ஆதி திராவிடர் இனத்தைச்
சேர்ந்த 1800 விவசாயிகளுக்கும் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 200 விவசாயிகளுக்கும்
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.10,000 மானியம்
இதன்படி அவர்கள்,
தங்கள் நில மேம்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்
பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் புதிய மின்மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு
பதில், புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.10,000/- வீதம் மானியம்
கிடைக்கும்.
2000 விவசாயிகளுக்கு
மொத்தம்
2000 விவசாயிகள் பயன் பெறும் வகையில் 2 கோடி ரூபாயை, தாட்கோ மூலம் விடுவிக்க நிர்வாக
ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு “ஷாக்” கொடுத்த மத்திய அரசு! PM Kisan அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...