விவசாயிகளை ஈர்க்கும் வகையில் சிறுகுறு விவசாயிகளுக்கும் ஓய்வூதியம்! விவரம் இதோ!!

 


விவசாயிகளை ஈர்க்கும் வகையில் சிறுகுறு விவசாயிகளுக்கும் ஓய்வூதியம்! விவரம் இதோ!!


பிரதான் மந்திரி கிசான் மன் தன் யோஜனா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கவலை தெரிவித்த நாடாளுமன்றக் குழு, அதிக விவசாயிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தில் விரிவான திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது.


மேலும், தன்னார்வத் திட்டம் செப்டம்பர், 2019 இல் தொடங்கப்பட்டது. இதில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, அவர்களின் பங்களிப்பு மூலம் ஓய்வூதியம் பெற விருப்பம் அளிக்கப்படுகிறது. இரண்டு ஹெக்டேர் நிலம் உள்ள விவசாயிகளும் பயனடையும் வகையில், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.



விவசாயத்திற்கான நாடாளுமன்றக் குழு, தனது 24வது அறிக்கையில், இந்தத் திட்டத்திற்கு அதிக விவசாயிகளை ஈர்க்காததற்கான காரணத்தை அரசு கண்டறிந்து, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.


நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.காட்டிகௌடர் தலைமையிலான, இந்தக் குழு வழங்கிய ஆலோசனைகளின் பேரில் அரசு தயாரித்த 31ஆவது நடவடிக்கை அறிக்கை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.



திட்டத்திற்கு விரிவான மறுசீரமைப்பு தேவையான அறிவுறுத்தல்


 இத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் சேரவில்லை என்பதை வேளாண் அமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது என்று குழு கூறியுள்ளது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றக் குழு தனது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாதது, துறையின் மோசமான செயல்பாட்டைக் காட்டுகிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த அணுகுமுறையில் விரைவில் நடவடிக்கை எடுக்க, மற்றும் கிசான் மன் தன் யோஜனாவில் விரிவான திருத்தங்களைச் செய்வதற்கான ஆலோசனையை குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



கிசான் மன் தன் யோஜனா


மோடி அரசின் கிசான் மன் தன் யோஜனா திட்டம், 31 மே 2019 அன்று தொடங்கப்பட்டதாகும். இதன் கீழ், நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு நில விவசாயிகளுக்கும், 60 வயது பூர்த்தி ஆன பின், விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதன் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க....


Pm Kisan: விவசாயிகளுக்கு பிரத்யேகமான அடையாள அட்டை கிடைக்கும்!!


PMFBY: விவசாயிகளின் பிரீமியம் க்ளைம் குறித்து ஒன்றிய அரசின் தகவல்!!


கிசான் கிரெடிட் கார்டு KCC கால்நடை வளர்ப்புக்கு வட்டிதொகை முழுவதும் தள்ளுபடி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments