விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசாக PM கிசான் திட்டத்தின் 10-வது தவணை புதிய தகவல்!!
மத்திய அரசு சார்பாக தகுதியுள்ள விவசாயிகளின் மொபைல் நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ்10-வது தவணை நிதிக்காக தகுதியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நாட்டில் கோதுமை விதைப்பு மற்றும் நீர்ப்பாசனம் நடந்து வருகிறது. சில இடங்களில் உரம் போடும் பணியும் துவங்கியுள்ளது. இதனிடையே PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள ரூ.2,000 வரும் புத்தாண்டு துவங்கும் தினத்தன்று அதாவது ஜனவரி 1-ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என்று சமீபத்திய ஊடக அறிக்கை ஒன்று தகவல் தெரிவித்து உள்ளது.
நாட்டிலுள்ள
விவசாயிகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, நலிவுற்ற விவசாயிகளின்
ஆண்டு வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
(PM-KISAN) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2019
பிப்ரவரியில் PM-KISAN திட்டம் துவக்கப்பட்ட போது சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க்
அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர்
மோடி.
தகுதி வாய்ந்த
விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், ஒரு நிதி ஆண்டில் 3 முறை அவர்களின்
பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000
வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த
திட்டத்தின் கீழ் 9 தவணை நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 10-வது தவணைக்காக நாடு முழுவதும்
உள்ள விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
அமைச்சர் நரேந்திர தோமர், தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஜனவரி 1, 2022 அன்று,
PM KISAN திட்டத்தின் கீழ் ரூ.2,00 போடப்படும் என்று ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளதாக
India.com-ல் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை கூறுகிறது.
மத்திய அரசு
சார்பாக தகுதியுள்ள விவசாயிகளின் மொபைல் நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. அந்த மெசேஜில் PM KISAN திட்டத்தின் கீழ் அடுத்த தவணையை 2022-ஆம் ஆண்டு
ஜனவரி 1-ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் என்றும், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு
சமபங்கு மானியம் வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
pmindiawbcast.nic.in அல்லது தூர்தர்ஷன் மூலம் விவசாயிகள் இந்த ப்ரோகிராமில் சேரலாம். இத்திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதற்கு முன் நாட்டின் அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்கு முன், 10-வது தவணை நிதியை விவசாயிகள் பெறலாம் என கூறப்பட்டு வந்த நிலையில்,
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
புத்தாண்டு
பரிசாக ஜனவரி 1-ம் தேதி விவசாயிகளின் அக்கவுண்ட்டில் பணம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து PM-KISAN திட்டத்தில் இணைந்துள்ள
விவசாயிகள் 10-வது தவணைக்கான நிதி ஜனவரி 1-ல் கிடைக்க போகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க....
PM Kisan திட்டத்தில் 6 புதிய மாற்றங்களால் 10 வது தவணை கிடைப்பதில் சிக்கல்! விவரம் இதோ!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...