விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 75% மானிய விலையில் ட்ரோன்கள்!!
விவசாயத்தில்
ட்ரோன்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், விவசாய ட்ரோன்களை குறைந்த விலையில்
வாங்குதல், பயன்படுத்துதல் மற்றும் அதனை கையாளும் விதம் ஆகியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை
மத்திய வேளாண் அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது வேளாண் பட்டதாரிகளுக்கும் நன்மை
பயக்கும். விவரம் உள்ளே காணுங்கள்.
ICAR,
க்ரிஷி விக்யன் கேந்திராஸ் மற்றும் மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் ட்ரோன் வாங்குவதற்கு
"SMAM (Sub-Mission on Agricultural Mechanisation)" திட்டம் 100% அல்லது
ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இது விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள்
(FPO) ட்ரோன்களை வாங்குவதற்கு 75% மானியத்தை வழங்குகிறது.
விவசாயத்தில் ட்ரோன்களின் பயன்பாடு நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். ட்ரோன்களை வாடகைக்கு அளிக்கும் நிறுவனங்களுக்கு, ஒரு ஹெக்டேருக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ட்ரோன்களை வாங்கும் நிறுவனங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3,000மும், விவசாயிகள், FPOக்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் கூட்டுறவு சங்கம் மூலம் ட்ரோன் வாங்குவதற்கு 40% அல்லது ரூ. 4 லட்சம் வரை மானிய நிதியுதவி அளிக்கப்படும் என்றும் இந்திய ட்ரோன் கூட்டமைப்பு தலைவர் (Drone federation of India) ஸ்மித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே,
விதவிதமான தோழில்நுட்பத்துடன் வெளிவந்துக்கொண்டிருக்கும் ட்ரோன்களின் பயன்பாடு, விவசாயிகளை
கவரும் வண்ணம் உள்ளன. இதன் பயன்பாடும், அவர்களது வேலையை எளிதாக்குகிறது. அந்த வகையில்
இந்திய ட்ரோன் கூட்டமைப்பு தலைவர் ஸ்மித் ஷா அறிவித்திருக்கும், இந்த மானிய விவரம்,
விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
வேளாண்
பட்டதாரிகளுக்கு ட்ரோன் வாங்குவதற்கு 50% அல்லது ரூ. 5 லட்சம் வரையிலான மானியம் வழங்கப்படும்.
ட்ரோன்களை வாங்குவதற்கு மாநில அரசில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும், பின்னர்
அவை சரிபார்க்கப்பட்டு ட்ரோன் வழங்க வழிவகை செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. மேலும்
சிறப்பாக, வேளாண் ஆராய்ச்சி மற்றும் விவசாயப் பயிற்சி நிறுவனங்களுக்கு 8 முதல் 10 லட்சம்
ரூபாய் வரையிலான விவசாய ட்ரோன் மாதிரிகள் இலவசமாக வழங்கப்படும்.
FPOக்கள், CHCகள் மற்றும் விவசாயத் தொழில்முனைவோர்களுக்கு மானிய விலையில் ட்ரோன்களை வழங்குவதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த உதவுவதோடு, எளியவர்களும் ட்ரோன்களை பயன்படுத்த முடியும் என்று ஸ்மித் ஷா தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு, விவசாய மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பப்படுகிறது.
மேலும்
படிக்க....
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ரூ.10000 வழங்கும் மத்திய அரசு! உங்களுக்கும் வேணுமா?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...