தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தை பட்டத்திற்கான விலை முன்னறிவிப்பு!
தமிழ்நாட்டில்
தைபட்டம் முக்கிய சாகுபடி பருவமாகும். பெரும்பாலும் தானியங்கள், எண்ணெய் வித்துகள்
மற்றும் காய்கறிகள் இக்காலகட்டதில் சாகுபடி செய்யபடுகின்றது. இதற்கு ஏதுவாக விவசாயிகள்
தங்கள் நடவு முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
இவ்விதைப்பு
முடிவு மேற்கொள்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும்
ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்
விலை முன்னறிவிப்புத் திட்டம், விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வு
முடிவுகளின் அடிப்படையில், எண்ணெய் வித்துகள், காய்கறிகள் மற்றும் வாழைக்கான பிப்ரவரி 2022
முதல் மார்ச் 2022 வரையிலான விலை முன்னறிவிப்பை வழங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை
ஆலோசனை அடிப்படையில் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
தேங்காய் மற்றும் கொப்பரை
தேங்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான
கொப்பரை கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.95 வரை
இருக்கும்.
நிலக்கடலை
மற்றும் எள்
தரமான நிலக்கடலையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.60
முதல் ரூ.65 வரையும் மற்றும் தரமான எள்ளின்
பண்ணை விலை ரூ.98 முதல் ரூ.100 வரை இருக்கும்
காய்கறிகள்
தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.25 முதல்
ரூ.27 வரை, நல்ல தரமான கத்திரியின் பண்ணை விலை
கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ35 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் பண்ணை விலை கிலோவிற்கு
ரூ35 முதல் ரூ .40 வரை இருக்கும்
வாழை
பூவன் வாழையின்
சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 15 முதல் 17, கற்பூரவள்ளி ரூ.15 முதல் ரூ.20 மற்றும்
நேந்திரன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.32 முதல் ரூ.35 வரையும் இருக்கும்.
மேலும்
படிக்க....
2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, உர மானியத்தின் நிலவரம் என்ன?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...