விவசாயிகளுக்கு கூடுதலாக, 20 சதவீதம் மானியம்! வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்!!
ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக, 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக் குடில், வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இயந்திர மயமாக்கல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் போன்றவற்றில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த, சிறு, குறு விவசாய குழுக்களுக்கு, கூடுதலாக, 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, நடப்பு நிதியாண்டிற்கு, 5 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
இத்திட்டங்களில் பயன்பெற, உழவன் மொபைல் போன் செயலி வாயிலாகவோ, https://www.tnagrisnet.tn.gov.in; https://tnhorticulture.tn.gov.in; https:aed.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாகவோ, தேவையான விபரங்களை அளித்து, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகள், கூடுதலாக அரசு வழங்கும், 20 சதவீத மானியத்தை பெற்று பயன்பெறவும். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
இனி விவசாயிகள் விளைபொருட்களை அடகு வைத்து ரூ. 75 லட்சம் வரை கடன் பெறலாம்!!
விவசாயிகளுக்கு 10 HP சோலார் பம்ப்செட் 90% மானியம் வேளாண் துறை அசத்தல்!!
விவசாயிகள் யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா பயன்படுத்த ஆலோசனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...