விவசாயிகளுக்கு 10 HP சோலார் பம்ப்செட் 90% மானியம் வேளாண் துறை அசத்தல்!!
விவசாயிகள் 90 சதவீத மானியத்தில் சோலார் பம்புசெட்களை அமைத்துப் பயன்பெறலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தி பம்புசெட் திட்டம்
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் திட்டம். சூரிய சக்தி அதிக அளவில் கிடைக்கும் தமிழகத்தில், அதனை மின் சக்தியாக மாற்றி வேளாண்மையில் பெருமளவில் பயன்படுத்திட முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் நிறுவப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மூலம் பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை எளிதாக மேற்கொள்ள இயலும்.
மானிய விபரம்
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மின் கட்டமைப்புடன் சாராத, சூரிய சக்தியால் தனித்து இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவிகித மானியத்துடன் கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும்.
கூடுதல் வசதிகள்
இத்திட்டத்தின் கீழ் நிறுவப்படும் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் AC மற்றும் DC பம்பு செட்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக பராமரிப்பு செய்வதுடன், காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும்.
அரசு வரையறுத்துள்ள தகுதி
ஏற்கனவே கிணறு அமைத்து, மின் இணைப்பு இல்லாமல் டீசல் என்ஜின் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளாக இருக்க வேண்டும். புதிதாக கிணறு அமைக்கும்பட்சத்தில், அரசு வரையறுத்துள்ள நிலநீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் (Safe Firka) மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அனுமதிக்கப்படும்.
சூரிய சக்தி பம்பு செட்டை நிறுவியபின், நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து பாசனம் மேற்கொள்வதற்கு விவசாயி உறுதிமொழி அளித்திட வேண்டும். இலவச மின் இணைப்புக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், தங்கள் மூதுரிமையின்படி, இலவச மின் இணைப்பு பெறும்போது, சூரிய சக்தி பம்பு செட்டை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை வழங்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
- ஆதார் அட்டையின் நகல்.
- புகைப்படம்.
- சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்.
- ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், சாதிச் சான்றிதழ்.
- சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
விண்ணப்பித்தல்
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (அல்லது) மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க....
கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து வேளாண் கருவிகள் வாங்க மானியம்!!
அட்மா திட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலா!!
காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைக்கும் இயற்கை முறை காட்டு பன்றி விரட்டி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...