அட்மா திட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலா!!
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 50 விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு பேராவூரணி வட்டாரம் சீதாம்பால்புரம் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி திரு. சுரேஷ் அவர்கள் 15 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார் நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது.
இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது. பொதுவாக நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் அதிகரித்து பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவாகவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார்.
அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்திலையும் அதிகப்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.
பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள வயலினை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்தார். பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி. சி. சுகிதா பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
பயிற்சியின் நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு அய்யா மணி அவர்கள் நன்றி கூறினார் பயிற்சிக்கான ஏற்பாட்டினை திரு. பூமிநாதன், திரு. சுரேஷ் திரு. ஜெரால்ட் திரு முருகேஷ் , திரு.தினேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...