Random Posts

Header Ads

தஞ்சை மாவட்டத்தில் விதை சான்று மற்றும் அங்கக சான்று மாநில இணை இயக்குனர் அதிரடி ஆய்வு!!

 


தஞ்சை மாவட்டத்தில் விதை சான்று மற்றும் அங்கக் சான்று துறையின் மாநில இணை இயக்குனர் அதிரடி ஆய்வு!!


தஞ்சை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விதை பண்ணைகளை விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையினுடைய மாநில இணை இயக்குனர் திருமதி. சாந்தி அவர்கள் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களை ஆய்வுகள் மேற்கொண்டார். 


இவ்வாய்வின் போது திருமதி.சாருமதி வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்), திருமதி. சுஜாதா வேளாண்மை துணை இயக்குனர் (விதைஆய்வு), வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர், வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) பட்டுக்கோட்டை, வேளாண்மை உதவி இயக்குனர் (விதைச் சான்றளிப்பு ) ஆகியோர் உடன் இருந்தனர்.



மதுக்கூர் வட்டாரத்தின் பெரியகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள திரு காளிதாஸ் அவர்களின் இயற்கை வேளாண்மை பண்ணை — தமிழ்நாடு அங்கக் சான்றளிப்பு துறையினால் சான்றளிக்கப்பட்ட பண்ணையாகும். இப்பண்ணையை மாநில இணை இயக்குனர் திருமதி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு, பண்ணையின் செயல்திறன் மற்றும் தரமான விதை உற்பத்தி குறித்து ஆய்வு செய்தார்.


ஆய்வின்போது பாரம்பரிய நெல் வகைகள், தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, தென்னை, காய்கறி வகைகள் ஆகியவற்றின் வளர்ச்சிநிலை மற்றும் தரத்தை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு விதைத் தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், சரியான சான்றளிப்பு நடைமுறைகள், மற்றும் தரநிலைகளை பின்பற்றுவதின் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கினார்.


மேலும், அப்பகுதி விவசாயிகள் இயற்கை வேளாண்மை மேற்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியம் மற்றும் ஊக்கத்தொகை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அளித்தார். இதன்மூலம் பலர் இயற்கை வேளாண்மைக்கு மாறும் முயற்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆய்வின்போது விதை சான்று உதவி இயக்குனர், விதை சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள், வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.

📞 மேலும் தொடர்புக்கு

Time To Tips தளத்தின் மூலம் வெளியிடப்படும் தகவல்கள், அரசு அறிவிப்புகள், மற்றும் பயனுள்ள வழிகாட்டல்களை தொடர்ந்து அறிந்துகொள்ள, எங்களது YouTube சேனலை பின்தொடருங்கள்:

🎥 Time To Tips – YouTube சேனல்


🌿 விவசாயிகள் மற்றும் பொதுப் பயனாளர்களுக்காக

அரசு திட்டங்கள், மானியங்கள், காப்பீடு, மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை
உடனுக்குடன் பெற எங்களது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

🔗 வாட்சப் குழுவில் சேர: Time to Tips  (Join WhatsApp Group)


🙏 நன்றி!

உங்கள் ஆதரவு தான் எங்கள் ஊக்கம் 💚
தொடர்ந்து “Time to Tips” உடன் இணைந்திருங்கள் — பயனுள்ள தகவல்கள், நம்பகமான வழிகாட்டல்கள், மற்றும் புதிய அறிவிப்புகள் உடனுக்குடன்!


Post a Comment

0 Comments