விவசாய திட்டங்களுக்கு
ரூ.45.08 இலட்சம்
ஒதுக்கீடு, 50% மானியத்தில் பல்வேறுவகையான
திட்டங்கள்!! விவசாயிகளுக்கு அழைப்பு!!
விவசாய திட்டங்களுக்கு
ரூ.45.08 இலட்சம்
ஒதுக்கீடு
திண்டுக்கல்
மாவட்டத்தில் தேசிய உணவு பாதுக்காப்பு இயக்கத்தின்
கீழ் 2021-22ம் ஆண்டுக்கு எண்ணெய்
வித்து பயிர்களின் (நிலக்கடலை) உற்பத்தியை அதிகரிக்க ரூ.45.08 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான
இடுபொருட்கள் மானியம்
இம்மாவட்டத்திற்க்கு 250 எக்டருக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கு தேவையான விதை, விதை நேர்த்தி செய்ய உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவை, போன்ற இடுபொருட்கள் மானியத்துடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட உள்ளது.
மேலும் நிலக்கடலை பயிர்க்கு தேவையான உயிர் உரங்கள் ரூ.300/- ஒரு எக்டருக்கு நுண்ணூட்டக்
கலவையும் ரூ.500/-, எண்ணெய் தன்மையை அதிகரிக்க ஜிப்சம் பின்னேற்பு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.750/
அல்லது 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
நிலக்கடலைக்கு
பூஸ்டர் தெளிக்க 50%
மானியம்
நிலக்கடலையின் வளர்ச்சிக்கு மற்றும் ஊட்டச்சத்து ஊக்கிகள் கலந்த பூஸ்டர் தெளிக்க ஒரு எக்டருக்கு ரூ.1250/-
அல்லது 50% மானியத்தில் – ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிரிகளை தாக்கும் வாடல் நோய் மற்றும் வேர்
அழுகல் போன்ற நோயினை கட்டுப்பாடுத்த உயிரியல் முறையில் ட்ரைக்கோடெர்மா விரிடிக்கு 50% மானியத்தில் மூலம் விநியோகம் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு
பல்வேறு வகையான மானியங்கள்
தற்போது
எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சுழல்கலப்பை விநியோகம் ஒன்றுக்கு ரூ.34,000/- அல்லது 50% மானியத்தில் மொத்தம் 9 எண்களும், தார்பாயிக்கு, விநியோகத்திற்கு ஒன்றுக்கு 50% மானியத்தில் மொத்தம் 100 எண்களும், விசைத்தெளிப்பான் விநியோகத்திற்கு ஒன்றுக்கு ரூ2500/- அல்லது 50% மானியத்தில் மொத்தம் 10 எண்களும் பின்னேற்பு மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு
எண்ணெய் வித்துகள் சாகுபடி பயிற்சி
வல்லுநர்
விதை உற்பத்திக்கு 10 குவிண்டாலும், ஆதர நிலை விதை
உற்பத்திக்கு 100 குவிண்டாலும் சான்று நிலை விதை உற்பத்திக்கு
120 குண்டாலும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதை விநியோகம் (10 ஆண்டுக்கு
உட்பட்ட இரகத்திக்கு) குவிண்டாலுக்கு ரூ.4000/- இம்மாவட்டத்திக்கும் 100 குவிண்டால்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துகள் சாகுபடி பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெற
உழவன் செயலியின் மூலம் முன் பதிவு
இத்திட்டத்தின்
மூலம் பயன் பெற உழவன்
செயலியின் மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அல்லது தக்க ஆவணங்களுடன் வட்டார
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக சமர்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
தகவல் வெளியீடு
திண்டுக்கல்
மாவட்ட வேளாண்மை – உழவர் நலத்துறை துணை இயக்குநர் சி. அமலா (மத்திய திட்டம்) மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் இரா.மகேஷ் ஆகியோர்
தெரிவித்தனர்.
மேலும் படிக்க....
ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் பண்ணையம் அமைத்து லாபம் பெறுவது எப்படி?
லட்சங்களில் வருமானம் தரும் மா சாகுபடி செய்வதற்கான 5 சிறந்த டிப்ஸ்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...