விவசாயிகளே...!!
நீர் பாசனக் குழாய்கள் வாங்க ரூ.15,000 மானியம் அரசு அறிவிப்பு!!
நீர் பாசனத்துக்கு
குழாய்கள் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு தலா ரூ.15.000 மானியம் வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர்
நலத் துறை அறிவித்துள்ளது.
அரசு முடிவு
ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. இதன் ஒருபகுதியாக விவசாயிகள் நிலமேம்பாட்டுக்குக்காக ஆழ்துளைக் கிணறு மற்றும்
திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்த புதிய மோட்டார் வாங்குவதற்கு
மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மானியம் Rs.
15,000
இதன்படி
2,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து,
குழாய்கள் வாங்குவதற்கான மானிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில்,
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
2000 விவசாயிகள்
தேர்வு
1,300 ஆதிதிராவிடர்
மற்றும் 700 பழங்குடியின விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், தங்கள் வேளாண்
நிலத்தில் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் குழாய்கள் வாங்குவதற்காக தலா ரூ.15,000
மானியம் வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.3 கோடி நிதி விடுவிக்கப்படுகிறது.
நிதிப் பங்களிப்பு
இதில், ரூ.1.30
கோடி செலவினம் மத்திய அரசு நிதியிலிருந்தும், ரூ.1.70 கோடி செலவினம் மாநில அரசு நிதியிலிருந்தும்
வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வாங்க 80% வரை மானியம்!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...