வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் நட மானியம்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!



வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் நட மானியம்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!


கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடி பகுதி வயல் வரப்புகளில் அரசு மானிய உதவியுடன் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

 

மரக்கன்று நடவுப் பணி

 

வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் தமிழக அரசின் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் தின் கீழ் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயிகள் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

 


இப்பகுதியில் உள்ள திம்மராவுத்தன்குப்பம் கிராமத்தில் விவசாயி சிகாமணி வயலில் தேக்கு,செம்மரம்,வேங்கை மற்றும் மகோகனி ஆகிய மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை கடலூர் வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தொடங்கி வைத்தார்.

 

25,000 மரக்கன்றுகள் இலக்கு

 

அப்போது அவர் பேசுகையில், “தற்போது குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

பருமமழை முடிந்து தண்ணீர் வடிந்திருக்கும் இச்சூழல் மரக்கன்றுகளை நடுவடுதற்கான ஏற்ற சூழல். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் அனுசுயா, துணை வேளாண்அலுவலர் வெங்கடேசன், உதவிவேளாண் அலுவலர்கள் கார்த்திகேயன், சிவக்குமார்,வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ், பயிர் அறுவடை சோதனைப் பணியாளர் சுந்தர் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

 


விவசாயிகளுக்கு மானிய உதவி

 

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகளுக்கு இலவசமாகத் தேக்கு,செம்மரம், வேங்கை,மகோகனி,பலா உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம்

 

இந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்காக மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மானியம் தரப்படும். வரப்பு ஓரம் நடுவதற்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தோப்பாக நடுவதற்கு ஏக்கருக்கு 160 கன்றுகளும் வழங்கப்படுகின்றன.

 

மரக்கன்றுகளை பெறுவது எப்படி?

 

  • உழவன் செயலியில் முன்பதிவு செய்த விவசாயிகள் இதைப் பெறலாம்.

 

  • அவர்களின் நிலங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள் நேரடியாகச் சென்றுக் கள ஆய்வு செய்வர்.

 


  • அதன்பின் சான்று அளித்து, உதவி வேளாண் இயக்குநர் அலுவலகம் மூலம் உரிய கன்றுகளை பெறுவதற்கான ஆணை அளிக்கப்படுகிறது.

 

  • தொடர்ந்து,நெய்வேலி நகரியத்தில் உள்ள வன விரிவாக்க மைய நாற்றங்காலில் தேவையான மரக்கன்றுகளை எடுத்து வந்து வயலில் நடவு செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கலாம்.


மேலும் படிக்க....


குழித்தட்டு நாற்றாங்கால் உற்பத்தி மூலம் மஞ்சள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்!!


லேசர் கருவி மூலம் நிலத்தை துல்லியமாக சமப்படுத்துதல் தொழில்நுட்பம்!!


PM Kisan 10 வது தவணை E-KYC செய்யாவிட்டால் கிடையாது! மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments