குழித்தட்டு நாற்றாங்கால் உற்பத்தி மூலம் மஞ்சள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்!!
இந்தியாவில்
உணவு, மருந்து, அழகு சாதன பொருட்களில் மஞ்சள் (Turmeric) முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளவிலான உற்பத்தியில் 74 - 80 சதவீதம் இந்தியாவில் பயிரிடப்பட்டு, 80 சதவீதம் வரை
உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சளின் சராசரி
உற்பத்தி திறன் எக்டேருக்கு 5 டன். இந்தியாவில் பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில்
தமிழகத்திற்கு இரண்டாவது இடம். 36ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்டு 19 ஆயிரம் டன்கள்
கிடைக்கிறது. இதில் குர்குமின் 3 - 7 சதவீதம் உள்ளது. விரலி மற்றும் தாய் மஞ்சளை விதைப்புக்கு
பயன்படுத்தலாம்.
நோய்த் தடுப்பு
மேலாண்மை
ஏக்கருக்கு
1000 முதல் 2000 கிலோ மஞ்சள் தேவை. ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு
கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்து நட்டால் கிழங்கு அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். ஒரு
லிட்டர் தண்ணீரில் ஒன்றரை கிராம் பாசலோன் 35 இ.சி. கரைசலில் கலந்து 15 நிமிடம் ஊறவைத்தால்
செதில்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
மஞ்சள் நாற்றங்கால்
மஞ்சள் கிழங்கிற்கு
பதிலாக மஞ்சள் நாற்றை இனப்பெருக்கம் செய்து சாகுபடி (Cultivation) செய்யலாம். கிழங்குகளை
தேர்ந்தெடுத்து 0.3 சதவீதம் மேன்கோசெப், 0.075 சதவீதம் குயினால்பாஸ் கொண்டு அரைமணி
நேரம் விதைநேர்த்தி செய்து ஒன்றரை மாதங்கள் வரை நிழலில் வாட விட வேண்டும். கிழங்குகளை
ஒரு பரு (கணு) உள்ள சிறு துண்டுகளாக வெட்டி பனைஓலை பாயில் வைத்து மட்கிய தென்னை நார்
கழிவால் மூடவேண்டும்.
லேசாக நீர்
தெளித்து நான்கு நாட்கள் வைத்திருக்க வேண்டும். முளைப்பது லேசாக தெரிந்தவுடன் கிழங்கு
துண்டை எடுத்து 2 கிராம் கார்பன்டசிம், 0.3 சதவீத மேன்கோசெப் கலந்த நீரில் அரைமணி நேரம்
ஊறவைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இரண்டு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு மண்புழு உரம் கலக்க வேண்டும். இதில் ஒரு கிலோ அளவிற்கு 10 கிராம் டிரைகோடெர்மா கலக்கலாம். இதை குழித்தட்டுகளில் நிரப்பி முளைத்த கணுவை நடவு செய்ய வேண்டும்.
50 சதவீத நிழல் வலை கூடாரத்தில் அடுக்கி பூவாளியில் நீர் தெளிக்க வேண்டும்.
ஒன்றிரண்டு இலைகள் வந்தவுடன் ஹூயூமிக் அமிலம் 0.5 சதவீதம் தெளிக்கலாம். இது தெளித்த
10 நாட்களுக்கு பின் 19:19:19 நீரில் கரையும் no தெளிக்க வேண்டும். துண்டு வெட்டி நடவு
செய்த 30 - 35 நாட்களுக்குள் நாற்று நடவுக்கு தயாராகி விடும்.
மாலதி, உதவி
பேராசிரியை
ஜெகதாம்பாள்,
ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்
சந்தியூர் சேலம்,
97877 13448
மேலும் படிக்க....
தை பட்டத்தில் உளுந்து சாகுபடி! எந்தெந்த இரகங்களுக்கு எவ்வளவு மகசூல் கிடைக்கும்?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...