மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1800 வரை கிடைக்க வாய்ப்பு!!



மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1800 வரை கிடைக்க வாய்ப்பு!!


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணிப்பு


அமெரிக்கா, சீனா, பிரேசில், அர்ஜென்டினா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மக்காச்சோளம் பெருவாரியாக பயிரிடப்படுகிறது. இந்த நாடுகள் இணைந்து உலக மொத்த மக்காச்சோள உற்பத்தியில் 74.86 சதவீதம் பங்களிக்கிறது. 


மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா பரப்பளவில் நான்காவது இடத்திலும் உற்பத்தியில் ஆறாவது இடத்திலும் உள்ளது. இந்தியா உலக மக்காச்சோள பரப்பளவில் நான்கு சதவீதமும் மொத்த உற்பத்தியில் இரண்டு சதவீதமும் பங்களிக்கிறது.



வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல அமைச்சக தகவலின்படி, இந்தியாவில் 2020-21ஆம் ஆண்டில் 9.9 மில்லியன் எக்டர் பரப்பளவில் 30 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உக்ரைன் ஆகியவை மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளாகும். 


இந்தியா 2019-20 ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்வது மட்டுமின்றி நிகர இறக்குமதியாளரகவும் திகழ்கிறது. இதில் 41 சதவீத மக்காச்சோளம் மியான்மரிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது.


இந்தியாவின் மொத்த மக்காச்சோள உற்பத்தியில், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இணைந்து 62 சதவீதத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 2019-20 ஆம் ஆண்டில் 3.35 இலட்சம் எக்டர் பரப்பளவில் 2.47 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது.



தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்கசோளம் பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட மக்காச்சோளத்தின் பரப்பளவு மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளது. 


மற்ற மாநிலங்களிலிருந்து வரும் வரத்து மூலம் தமிழகத்தின் மக்காச்சோளத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழக சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து மக்காச்சோள வரத்தானது நவம்பர் முதல் பிப்ரவரி வரை இருக்கிறது.

 

இச்சூழ்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 16 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காச்சோளத்தின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், 


நல்ல தரமான மக்காச்சோளத்தின் விலையானது (ஜனவரி 2022 வரை) குவிண்டாலுக்கு ரூ.1700 முதல் ரூ.1800 வரை இருக்குமெனக் கணித்துள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.



இத்தகவலை, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி- 0422-2431405 தொடர்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க....


மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) ரூ.20,050 கோடி செலவில் மீன் வளர்ப்பு திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?


3,000 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் ரூ. 2 லட்சம் வரை கடன்- கால்நடைத்துறை தகவல்!!


மண்புழு உரம் தயாரித்து, ஆண்டுக்கு 5 லட்சம் பெண் விவசாயி அசத்தல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments