மானாவாரி நிலக்கடலையில்
தண்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!
இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலாடி வட்டாரப் பகுதிக்கு உட்பட்ட கடுகுசந்தை மற்றும் நைனார்கோவில் வட்டாரப் பகுதிகுட்பட்ட மும்முடிச்சாத்தான் கிராமங்களில் மானாவாரி மற்றும் இறவைப்பயிராகப் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிரில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இளஞ்செழியன் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை-உழவர் நலத்துறை, கடலாடி வட்டாரத்தைச் சார்ந்த அதிகாரிகள் இணைந்து வயல்வெளி ஆய்வு நடத்தினர்.
தற்பொழுது,
நிலக்கடலையில் வேரழுகல் நோயின் தாக்குதலானது ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது. இந்நோயானது
மண் மூலம் பரவக்கூடிய பூஞ்சாண நோயாகும். மண்ணில் இருக்கும் அதிகமான ஈரப்பதம் மற்றும்
குறைந்த வெப்பநிலையானது இந்நோய் பரவ சாதகமான காரணிகள் ஆகும்.
நோயின் அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட
வயலில் செடிகளானது ஆங்காங்கே வாடிக் காய்ந்து காணப்படும். காய்ந்து போன செடிகளை வேரோடு
பிடுங்கி பார்த்தால் மண்ணிற்கு கீழே உள்ள தண்டில் கரும் பழுப்பு நிற திட்டுகள் காணப்படும்.
வெண்ணிற பூஞ்சாண வித்துக்களானது வேர் மற்றும் தண்டுப்பகுதிகளில் கடுகு அளவில் காணப்படும்.
பாதிக்கப்பட்ட செடிகளில் காய்கள் பிடிப்பது பாதிக்கப்படுவதோடு, காய்களின் வளர்ச்சியும்
தடைபட்டு விடும். மேலும், நோயினால் பாதிக்கப்பட்ட காய்களானது அழுகி விடும்.
மேலாண்மை முறைகள்
தண்டழுகல் நோயினைக்
கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 50 (றுP) 1 கிராம் மருந்தினை 1 லிட்டா் நீருடன் கலந்து
வேர் நனையும் படி மண்ணில் ஊற்ற வேண்டும்.
அடுத்த பருவத்திற்கான
மேலாண்மை முறைகள்
தொடா்ந்து ஒரே
வயலில் நிலக்கடலையை பயிரிடாமல் அடுத்த பருவத்தில் பயிர் சுழற்சி முறையைக் கடைபிடிக்க
வேண்டும்.
கடைசி உழவின்
போது ஒரு ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 100 கிலோ இட வேண்டும்.
விதைகளை டிரைக்கோடர்மா
4 கிராம் கிலோ அல்லது கார்பென்டாசிம் 50 (றுP) 2-3 கிராம் கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி
செய்து விதைக்க வேண்டும். மேலும், விதைப்பதற்கு முன்னர் ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மா
எதிர் உயிரியினை 1 கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு,
முனைவர் கு.இளஞ்செழியன், தொழில்நுட்ப வல்லுநர் (பயிர்ப் பாதுகாப்பு) மற்றும் முனைவர்
தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோரை
தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க....
நெற்பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...