தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு தாக்குதல் மற்றும் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்!!
காய்கறிகள்
காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலிபிளவர், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியது வேர்முடிச்சு நூற்புழுக்களாகும். நீலகிரி, கொடைக்கானல் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்நூற்புழுக்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
இவற்றால் 30 முதல் 60 சதம் வரை மகசூல் இழப்பு உண்டாகிறது.
மேலும் பூசணி வகையைச் சார்ந்த புடலை, பாகல், பீர்க்கன், பரங்கி, தர்பூசணி போன்ற பயிர்களில்
வேர்முடிச்சு நூற்புழுக்களின் பாதி[ப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பயிர் முழுமையான
மகசூலைத் தராமல் முன்னதாகவே காய்ந்து மடிந்து விடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு முட்டைக்கூடு நூற்புழு தாக்குதல் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நூற்புழுவின் முட்டைக்கூடுகள் 30 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்க வல்லவை. இந்நூற்புழுக்களால் 40 சதம் வரை மகசூல் குறைகிறது. மேலும் உருளைக்கிழங்குகளின் பருமன் குறைந்து, அவற்றின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைகிறது.
வாழையில் வேர் துளைக்கும் நூற்புழு
வாழையில் நான்கு வகை நூற்புழுக்கள் அதிக சேதத்தை உண்டு பண்ணுகின்றன. அவை வேர் துளைக்கும் நூற்புழு, வேர் அழுகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு மற்றும் வேர்முடிச்சு நூற்புழுக்களாகும். கோவை மாவட்டத்தில் அதிகமான அளவில் காணப்படும் குடையும் நூற்புழுக்களால் பெருத்த சேதாரம் ஏற்படுகிறது. சுருள் வடிவ நூற்புழு, வேர் அழுகல் நூற்புழு மற்றும் வேர்முடிச்சு நூற்புழு, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கருர், சேலம் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஆரஞ்சு, எலுமிச்சை
மற்றும் நாரத்தை
இப்பயிர்களைத்
தாக்கும் எலுமிச்சை நூற்புழு நீலகிரி, பழநி, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கோவை ஆகிய
மாவட்டங்களில் காணப்படுகிறது. இந்நூற்புழுக்களால் அதிகபட்சமாக 90 சதம் வரை மகசூல் இழப்பு
ஏற்படுகிறது. திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் எலுமிச்சையில் இந்த வகை நூற்புழுக்களின்
சேதம் மிக அதிக அளவில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகள் பலன் தரவேண்டிய எலுமிச்சை மரம்
5 அல்லது 10 ஆண்டுகளில் காய்ந்து அழிந்து விடுகிறது.
திராட்சை
கோவை, திண்டுக்கல்,
மதுரை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஏராளமான திராட்சைத் தோட்டங்கள் வேர்முடிச்சு நூற்புழுவால்
பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேர்களில் காணப்படும் இந்நூற்புழு
10 முதல் 15 சதம் வரை மகசூல் இழப்புக்கு காரணமாக இருக்கிறது. மேலும் நூற்புழுக்கள்
திராட்சையைத் தாக்கும் நோய்களையும் தீவிரப்படுத்த வழிவகை செய்கிறது.
மலர்ப்பயிர்கள்
கனகாம்பரம், மல்லி, ரோஜா, சம்பங்கி போன்றவற்றை வேர்க்கருகல் , மொச்சை வடிவ மற்றும் வேர்முடிச்சு நூற்புழுக்கள் வெகுவாகத் தாக்குகின்றன. இந்நூற்புழுக்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறாக, நூற்புழுக்கள் எல்லா வகைப் பயிர்களிலும் மிகுந்த சேதத்தை உண்டாக்குகின்றன. மேலும் நூற்புழுக்களை முற்றிலுமாக அழிப்பது மிகவும் கடினம.; பயிர்கள் வயலில் இல்லாதபோதும் நூற்புழுக்கள் வெகுகாலம் மண்ணில் உயிரோடு இருக்கும் சக்தி உள்ளவை.
எனவே நூற்புழுக்களின் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து
அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். நூற்புழுக்களின் தாக்குதல் அறிய மண்
மற்றும் வேர் மாதிரிகள் எடுத்துப் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும்.
தோட்டக்கால்
பயிர்களில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் முறைகள்
பயிர் நூற்புழுக்கள்
கட்டுப்படுத்தும் முறை
காய்கறி பயிர்கள்
வேர்முடிச்சு நூற்புழு நாற்றங்கால் ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு 10 கிராம் கார்போபியூரான்
3ஜி மருந்தினை விதைத்த ஒரு வாரத்திற்குள் இடுதல்.(அ) வேர் உட்பூசணம் – 1 கிலோ , ச.மீ(அ)
சூ. புளுரோசன்ஸ் – 10 கிராம் , ச.மீ நடவு வயல் சூ. புளுரோசன்ஸ் -2.5 கிகி , எக்டர்
மலர் பயிர்கள்
வேர்முடிச்சு நூற்புழு மற்றும் வேரழுகல் நூற்புழு ஒரு எக்டருக்கு கார்போபியூரான் 3ஜி
மருந்தினை 33 கிலோ அல்லது போரேட் 10 ஜி 10 கிலோ வீதம் நட்ட 15ம் நாள் இடுதல்.
வாழை வேர்முடிச்சு
நூற்புழு மற்றும் வேரழுகல் நூற்புழுக்கள் கார்போபியூரான் 3ஜி மருந்தினை கன்றுக்கு
40 கி வீதம் நடும் குழியில் இடுதல் அல்லது வாழை கிழங்கை மோனாகுரோட்டோபாஸ் கரைசலில்
(15 மிலி, லிட்டர் நீர்)10 நிமிடம் நனைத்துவைத்துநடுதல்.
நட்ட பின்பு
வேப்பம் பிண்ணாக்கு பூசப்பட்ட யூரியாவை கன்று ஒன்றுக்கு 700 கி. வீதம் இடுதல்.
திராட்சை வேர்முடிச்சு
நூற்புழு மற்றும் வேரழுகல் நூற்புழுக்கள் கார்போபியூரான் 3ஜி மருந்தினைகொடிக்கு 60
கிராம் என்றஅளவில் இடுதல்.(அ)
சூடோமோனாஸ்
புளூரசன்ஸ் பாக்டீரியாவைக் கொடி ஒன்றுக்கு 100 கிராம் வீதம் இடுதல்
எலுமிச்சை எலுமிச்சை
நூற்புழு மரம் ஒன்றுக்குகார்போபியூரான் 3ஜி மருந்தினை 100 கிராம் என்றளவில் இடுதல்
(அ) சூ.புளுரோசன்ஸ் – 20 கிராம் ,மரமொன்றிற்கு 4 மாதத்திற்குகொருமுறைமரத்தைச் சுற்றி
இடுதல்
பப்பாளி வேர்முடிச்சு,
மொச்சை வடிவ நூற்புழு நாற்றுநடும் குழிஒன்றுக்குகார்போபியூரான் 3ஜி மருந்தினைவிதைப்பின்
போதும் மற்றும் பூக்கும் தருணத்திலும் இடுதல்.
தகவல் வெளியீடு
முனைவர் த.செந்தில்குமார், முனைவர் கோ.நெல்சன் நவமணிராஜ், முனைவர் வீ.மு.இந்துமதி மற்றும் அ.தினகரன், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை.
மேலும் படிக்க....
நெற்பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...