நெற்பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!
இராமநாதபுரம் வட்டாரப் பகுதிக்குட்பட்ட காருகுடி கிராமத்தில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ராகவன் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இளஞ்செழியன் ஆகியோர் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் பற்றிய வயல்வெளி ஆய்வு நடத்தினர்.
தற்போது நிலவும் சூழ்நிலையானது நெற்பயிரில் அதிகளவில் நோய் தோன்றுவதற்கு
மிகவும் சாதகமானதாக உள்ளது. தற்பொழுது, பாக்டீரியல் இலைக்கருகல் நோயின் தாக்குதலானது
ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது.
சாதகமான சூழ்நிலை
மற்றும் நோய் பரவும் முறைகள்
சூடான வெப்பநிலை (25-30 ºc), அதிக ஈரப்பதம் மற்றும் காற்றுடன் கலந்த மழை இவைகள் அனைத்தும் இந்நோய் தாக்குவதற்கு தகுந்த சூழ்நிலையாகும். முந்தைய எஞ்சிய தாவரக் கழிவுகளில் இந்த நோய்க்கான பாக்டீரிய வித்துக்கள் தங்கி இருக்கும்.
இந்த பாக்டீரிய வித்துக்கள் பாசனநீர் மற்றும் நீர்ச்சிதறல்,
அதிக உரமளித்தல், மழை, பயிர்கள், இலைகள் உரசிக்கொள்ளும் போது[ம் மற்றும் காற்றின் மூலமாகவும்
பரவுகின்றது. இந்த பாக்டீரியாக்கள் பறித்த நாற்றின் சேதமடைந்த வேரின் வழியாகவும் உட்சென்று
பயிர் முழுவதையும் தாக்குகின்றது.
அறிகுறிகள்
இந்நோயின் அறிகுறிகளை இலைக்கருகல், வாடல் மற்றும் இலைகள் வெளிறிக் காணப்படுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஈரக்கசிவுடன் கூடிய சிறு மஞ்சள் புள்ளிகள் இலைகளின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றி பின் இவை இலைகளின் நீள அகல வாக்கில் பெரிதாகி அதன் ஓரங்களில் கீழ்நோக்கி மஞ்சள் நிற வளைவுடன் கூடிய பகுதியாக வளரும்.
நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும், சுருண்டும், இலை நரம்புகள் பழுதடையாமலும் காணப்படும். நோய் தீவிரமாகும் போது இலைகளின் ஓரங்கள் கருகிய திட்டுக்களாக மாறிக் காணப்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகளில் வெண்மையான பால் போன்ற (அ) பனித்துளி போல் (அ) கூழ் போன்ற திரவம் (திவலைகள்) படிந்து காணப்படும்.
இந்த திவலைகள்
காய்ந்த பின்னர் விரல்களால் தடவி பார்க்கும்போது, கரடுமுரடான பகுதிகளாக புலப்படும்.
நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் அறுவடைக்கு முன்பே காய்ந்து
விடும்.
கட்டுப்படுத்தும்
முறைகள்
நோய் தாக்கப்பட்ட
வயல்களிலிருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேணடும். ஒரு ஏக்கருக்கு
2 கிலோ பீளிச்சிங் புவுடரை பாசண நீருடன் கலக்க வேண்டும்.
இருபது சத சாணக்
கரைசலை (200 கிராம் மாட்டுச் சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து அதை படிய வைத்து
பின்பு வடி கட்ட வேண்டும். அதிலிருந்து வடி கட்டிய திரவத்தை உபயோகப்படுத்த வேண்டும்)
நோய் தோன்றும் தருணத்திலும், மீண்டும் 15 நாட்கள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம்.
ஐந்து சத வேப்பங்கொட்டை
சாறு அல்லது 3 சத வேப்ப எண்ணெய் கரைசல் ஏதேனும் ஒன்றினை நோய் தோன்றும் தருணத்தில் தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு
காப்பர் ஹைடிராக்சைடு 77 சதம் டபிள்யூபி (500 கிராம்) அல்லது ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்
ரூ டெட்ராசைக்ளின் சேர்ந்த மருந்து (120 கிராம்) ரூ காப்பர் ஹைடிராக்சைடு 77 சதம் டபிள்யூபி
(500 கிராம்) மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒட்டுத்திரவம் சேர்த்து நட்ட
30 மற்றும் 45 நாட்கள் கழித்து அல்லது நோய் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால்
15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மறுமுறை தெளிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு,
முனைவர் கு.இளஞ்செழியன், தொழில் நுட்ப வல்லுநர் (பயிர்ப் பாதுகாப்பு) மற்றும் முனைவர்
தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோரை
தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க....
மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1800 வரை கிடைக்க வாய்ப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...