சுர்தி வெள்ளாடு வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்!! சுர்தியின் சிறப்புகள் என்ன?
குஜராத் மாநிலத்தில்
உள்ள சூரத் பகுதி தான் இந்த சுர்தி வெள்ளாடுகளின் பூர்வீகமாகும். சூரத் தான் சுர்தி
என மருவி இருக்கிறது. இவ்வின வெள்ளாடுகள் அதிகப்படியாக பாலிற்காகவே வளர்க்கப்படுகின்றன.
இந்தப் பகுதியில் உள்ள இனம் தான் இன்னும் தனது தூய்மைத்தன்மையிலிருந்து இன்றும் மாறாதிருக்கிறது.
இவ்வினமும் அழிவின் விளிம்மை நோக்கியப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதும் உண்மை. இவ்வின வெள்ளாடுகள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சூரத், பரோடா மற்றும் நாசிக் பகுதிகளுக்கும் இங்கிருந்து இனவிருத்தி செய்து அனுப்பப்பட்டிருக்கிறது.
வீடுகளில் இரண்டு, மூன்று என்று ஆடுகளையும்
வளர்க்கிறார்கள். 15,20 என்று பட்டிகளாகவும் மந்தைகளிலும் மேய்ச்சலுககு ஓட்டி சென்று
அங்கே அடைத்தும் வளர்க்கின்றனர். இவ்வின ஆடுகளை பாலிற்காகவும் மற்றும் இறைச்சிக்காகவும்
வளர்த்து பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேற்றம் அடைந்திருக்கினறனர் என்பதும் உண்மை.
இதன் தோலின் நிறம் வெண்மையகாக் காட்சியளிக்கினறது. கொஞ்சம் கெட்டியான மற்றும் குறுகிய ரோமங்களைக் கொண்டிருக்கின்றனது. இலை வடிவிலான கூர்மையான முடிவில்லாத அதிக நீளமில்லாத காதுகளைக் கொண்டிருக்கின்றது.
அதன் தலை நடுத்தர அளவுடனும் நெற்றிப்பகுதியில் சற்று மேடு தள்ளிய
மாதியான தோற்றத்துடன் இருக்கிறது. இதன் கொம்புகள் சிறிய அளவிலான தட்டையுடன் பின்னோக்கி
நீண்டு கூரிய முனையுடன் தோற்றமளிக்கிறது. ஓரளவு தான் அதன் நீளம் இருக்கிறது.
ஏனைய ஆட்டினங்களை
விட இதன் கால்கள் சற்று குட்டையாக இருப்பதுடன் அதிக தூரம் இதனால் நடந்தும் பழக்கமில்லை.
இதன் வெள்ளாட்டுக் கிடாக்களின் சராசரி எடை 32 கிலோவாகவும் பெட்டைகளின் எடை 30 கிலோவாகவும்
இருக்கிறது.
தரம் குறைந்த
தீவனங்களையும், இலைதழைகளயைும் ஏன் சமயலறைக் காய்கறிக் கழிவுகளைக் கூட இது தீவனமாக எடுத்தக்
கொண்டு நன்கு வளரும் தன்மை படைத்த காரணத்தால் பராமரிப்பு செலவுகள் என்பது மிகவும் குறைவு
தான்.
சராசரியாக தினசரி
ஒன்று முதல் ஒன்னறை லிட்டர் பால் வரை இது தரக்கூடும். வீட்டிலேயே கொட்டகையில் அடைத்து
நல்ல பசுந்தீவனமும் அடர் தீவனமும் கொடுத்துப் பழக்கி இரந்தால் தினசரி இவ்வினம் 2 முதல்
2.5 லிட்டர் பால் கொடுக்கிறது.
ஓராண்டிலிருந்து ஒன்னறை ஆண்டுகளில் முதல் முறையாக குட்டிகள் ஈனுகின்றது. இரண்டு அல்லது மூன்று குட்டிகளை போடுகிறது. இதன் பால் மடி ஓரளவிற்கு பெரிதாக இருக்கின்றது. அதன் காம்புகள் சற்று தடித்தும் நீண்டும் கூம்வு வடிவத்திலும் இருக்கிறது.
இதன் உயரம் கிடாக்களுக்கு 69 செ.மீட்டரும்
வெள்ளாடுகள் 70 செ.மீட்டரும் கொண்டிருக்கின்றது. வெள்ளாடுகள் சராசரியாக 31 கிலோ எடையும்,
கிடாக்கள் 29 கிலோ எடையும் கொண்டிருக்கின்றது. பிறந்த குட்டிகளின் எடை 2 முதல் 2.5
கிலோ எடை இருக்கிறது. 2013ம் வருடத்திய கால்நடை கணக்கெடுப்பின்படி இவ்வகை ஆடுகள்
2,70,834 மொத்தம் இருக்கின்றது. பட்டியில் வளர்க்க விரும்புபவர்கள் இதனை வாங்கி வளர்க்கலாம்.
தொடர்புக்கு
டாக்டர் கே.வி. கோவிந்தராஜ், ஆராய்ச்சியாளர், ஜெ.பி.ந.அ., கவுந்தப்பாடி, ஈரோடு.
98427 04504.
மேலும் படிக்க....
நெற்பயிரில் எலி மேலாண்மை மற்றும் எலிகளை கட்டுப்படுத்தும் முறை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...