நெற்பயிரில் எலி மேலாண்மை மற்றும் எலிகளை கட்டுப்படுத்தும் முறை!!



நெற்பயிரில் எலி மேலாண்மை மற்றும் எலிகளை கட்டுப்படுத்தும் முறை!!


வேளாண்மையில் எலிகளின் மேலாண்மை ஒரு சவால் மிகுந்த வேலையாகும். எலிகளினால் ஏற்படும் இழப்பீடு 5ரூ இருந்து 50ரூ வரை காணப்படும். நெற்பயிரில் அதன் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் எலிகளினால் சேதாரம் ஏற்படும். 


நெல்லில் தானிய முதிர்ச்சி பருவத்தில் அதிகமாக தானியத்திற்கு சேதாரம் ஏற்படுத்தும். பயிர்கள் இல்லாத பருவத்தில் எலி தவளை, நத்தை போன்ற சிறிய உயிரினத்தை உண்டு உயிர் வாழும்.


எலிகளின் வாழ்க்கை முறை


1. எலிகள் ஒரு வருடம், அதற்குமேல் உயிர் வாழக் கூடியது, பெண் எலிகள் வருடத்திற்கு 4 முறை குட்டியிடும் ஒரு ஈற்றுக்கு 6 குட்டிகள் வரை ஈன்று எடுக்கும்.



2. எலிகளின் இனப்பெருக்கம் வறண்ட காலத்தைவிட குளிர்காலத்தில் அதிகம் இருக்கும்.


3. எலிகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் மற்றும் சாதகமான இருப்பிடம் இருக்கும்பட்சத்தில் இதன் இனப்பெருக்கம் அதிகம் இருக்கும்.


நெற்பயிரில் காணப்படும் எலிகளின் வகைகள்


i. மோல் எலி


நன்கு கட்டுமஸ்தான உடம்புவாகு, பன்றி போன்ற முக அமைப்பு, அடர் பழுப்பு நிறம் உடையதாக இருக்கும். வால் பகுதியில் செதில் போன்று இருக்கும்.


ii. புல் எலி


இவ்வகை எலிகளுக்கு மெல்லிய உடல்வாகு, சாம்பல் நிறத்தில் இருக்கும். உடம்பு நீளத்தைவிட வால் சிறியதாக இருக்கும்.


iii. இந்திய ஜெர்பில் எலி


இவ்வகை எலிகளுக்கு நல்ல பருமனான உடல்வாகு பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். உடம்பை விட வால் நீளமாக காணப்படும்.


iv. வயல் எலி


இவ்வகை எலிகளுக்கு மெல்லிய உடல்வாகு, உடம்பு பழுப்பு நிறத்தில் இருக்கும் வயிற்றுப்பகுதி வெண்மை நிறத்தில் காணப்படும்.


எலியின் சேதாரத்தின் அறிகுறி


1. நாற்றுக்கள் நட்டபின் காணாமல் போகுதல்,


2. பற்களால் வெட்டப்பட்ட நாற்றுக்கள்.


3. நாற்றுக்களின் தண்டு பகுதியில் ஒழுங்கற்ற வெட்டுக்கள்.



4. நாற்றுக்களின் அடிப்பகுதியில் 450 கோணத்தில் வெட்டுகள் தென்படுதல்.


5. சில இடங்களில் கதிர்கள் காணமல் போகுதல்.


எலிகளை கட்டுப்படுத்தும் முறை


விதைப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக வரப்புகளை சுத்தம் செய்யும்போது எலி பொந்துகளை அழிப்பது மற்றும் குறுகிய வரப்புகள் அமைப்பது.


வயல்களில் தண்ணீரை தேக்கி வைப்பது, இரவு நேரங்களில் ஆந்தைகள் அமருவதற்கு மரத்தூண்கள் அமைப்பது ஒரு ஹெக்டேருக்கு 40-50 எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.


தஞ்சாவூர் எலி கிட்டிகள் 100 எண்ணிக்கை ஒரு ஹெக்டேர் என்றளவில் வைக்க வேண்டும்.


எலி பொந்துகளை கண்டறிந்து இரண்டு மாத்திரைகள் (0.5 கிராம் அல்லது 0.6 கிராம்) அலுமினியம் பாஸ்பைடு ஒரு பொந்துக்கு என்று பயன்படுத்த வேண்டும். மாத்திரையை போட்டுவிட்டு எலி பொந்தினை மூடி விட வேண்டும்.



விசங்கள் வைத்து எலிகளைக் கட்டுப்படுத்தலாம் இதற்கு சிங் பாஸ்பைடு ஒரு பகுதி 49 பகுதி பொறி அல்லது கருவாடு கலந்து வைத்து எலிகளை அளிக்கலாம்.


எலிகளுக்கு இயற்கை எதிரிகளான பூனைகள், பாம்புகள் மற்றும் பறவைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


முனைவர் கோ. நெல்சன் நவமணிராஜ், முனைவர் த.செந்தில்குமார், முனைவர் அ.ப.சிவமுருகன், முனைவர் வீ.மு.இந்துமதி மற்றும் அ.தினகரன், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை – 622 303.


மேலும் படிக்க....


பருவமழையால் வரப்பை 4 அடி உயர்த்தி மழைநீரைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!!


PM KISAN மகிழ்ச்சி செய்தி: 12 நாட்களில் விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் வரும்!


நெல் பயிர் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு விவசாயிகள் அறிய வேண்டிய நுண்சத்து பரிந்துரைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments