நெல் பயிர் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு விவசாயிகள் அறிய வேண்டிய நுண்சத்து பரிந்துரைகள்!!

 


நெல் பயிர் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு விவசாயிகள் அறிய வேண்டிய நுண்சத்து பரிந்துரைகள்!!


நிலத்தில் இடுதல்


ஒரு எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை 50 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கிய நெல் நுண்ணூட்டக்கலவை 25 கிலோவை 250 கிலோ (1:10) தொழு உரத்துடன் கலந்து 30 நாட்கள் வைத்து ஊட்ட மேற்றி நடவுக்கு முன் இடவேண்டும்.


வயலில் ஒரு எக்டருக்கு 6.25 டன் தழை உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழுஉரம் இடப்பட்டிருப்பின், ஒரு எக்டருக்கு 12.5 கிலோ ஜிங்க் சல்பேட் போதுமானதாகும். உவர் மண், களர் (சோடியம்) மற்றும் சோடிய மண்ணில் 37.5 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு 500 கிலோ ஜிப்சத்தை இடவேண்டும். (ஜிப்சம் – கால்சியம் மற்றும் சுந்தகச்சத்தின் ஆதாரம்)



இரும்புச்சத்து பற்றாக்குறையுள்ள மண்ணாக இருப்பின் எக்டருக்கு 50 கிலோ பெர்ரஸ்சல்பேட்டுடன் (Fe2SO4) 12.5 டன் தொழு உரம் கலந்து இட வேண்டும் மற்றும் கந்தகச் சத்து பற்றாக்குறை இருப்பின் 40 கிலோ கந்தகத்தை ஜிப்சமாக இடலாம்.


இலைவழியாக நுண்ணூட்டப் பரிந்துரை


ஒரு சதவீதம் யூரியா, 2 சதவீதம் மோனோ அமோனியம் பாஸ்பேட் மற்றும் 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு உரங்களை கதிர்விடும் தருணத்தில் தெளிப்பு செய்ய வேண்டும். மீண்டும் முதல் தெளிப்பிலிருந்து 10 நாட்கள் கழித்து தெளிப்பதன் மூலம் மணிகள் பிடிக்கும் திறன் மற்றும் மகசூல் அதிகரிப்பு அனைத்து ரகங்களிலும் காணப்படும்.



ஜிங்க் சல்பேட் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் உள்ள வயல்களில் 0.5 சதவீதம் ஜிங்க் சல்பேட்டுடன் 1.0 சதவீதம் யூரியாவை கலந்து தெளிக்க வேண்டும். குறுகிய கால ரகங்களுக்கு 7-10 நாட்களில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். நீண்டகால ரகங்களுக்கு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். ஜிங்க் சல்பேட் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் மறையும் வரை தொடர்ந்து நுண்ணூட்டச்சத்துக்களை தெளிக்கலாம்.


தகவல் வெளியீடு


இதனை இராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று (ம) அங்ககச் சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ் தெரிவித்தார்.


மேலும் படிக்க....


தரமான வாழைக் கன்றுகளை, குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யும் நவீன முறை!!


சம்பா பட்டத்தில் நெல் பயிரினை தாக்கும் குலை நோய்!! முழுமையாக கட்டுப்படுத்தி அழிப்பது எப்படி?


ஒரு ஏக்கரில் 92 மூட்டை நெல் விளைச்சல்!! திருந்திய நெல் சாகுபடி மூலம் சாகுபடி வருவாயை பெருக்குவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments