மார்கழி பட்டத்தில் விதைப்பு செய்யவுள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்யவும்!!

 


மார்கழி பட்டத்தில் விதைப்பு செய்யவுள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்யவும்!!


திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதை பரிசோதனை நிலையமானது பெரம்பலூர்புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் மாவட்ட மைய நூலகம் அருகில் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்த தன்மை மற்றும் பிற இரகக்கலப்பு ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.



2021-22 ஆண்டு இந்நிலையத்தின் மூலம் 2820 விதை மாதிரிகள் பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு இதுவரை 2402 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 103 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிப்பது தடுக்கப்பட்டுள்ளது.


மேலும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் விவசாயிகள் தற்பொழுது பெய்துள்ள வடகிழக்கு பருவ மழையால் ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்ய நவரை பருவத்திற்கு ஏற்ற இரகங்கள் ஏ.டி.டீ-45, ஏ.டி.டீ-43, கோ-51, ஏ.டி.டீ-53, ஏ.டி.டீ36, ஏ.டி.டீ37, ஏ.எஸ்.டி-16, டி.கே.எம்-9,


மார்கழி பட்டங்களுக்கு ஏற்ற இரகங்களாக இராகி-கோ (இரா)-14, கோ-15, உளுந்து வம்பன்-6, வம்பன்-8, வம்பன்-10, பாசி பயறு வம்பன்-(பாப)-3, கோ-8, நிலக்கடலை ஜி.ஜே.ஜி-9, தரனி, கதிரி-9, கோ-7, டி.எம்.வி-14, வி.ஆர்.ஐ (எஸ்வி)-2, வி.ஆர்.ஐ-3 இது போன்ற தரமான சான்று பெற்ற இரகங்களையும், வீரிய ஒட்டு மக்காச்சோளத்திற்கு குறைந்தட்ச முளைப்புதிறன்-90% ஈரப்பதம் அதிகபட்சம்-12% புறத்தூய்மை குறைந்தபட்சம்-98%,


நெல் குறைந்தபட்ச முளைப்புதிறன்-80% ஈரப்பதம் அதிகபட்சம்-13% புறத்தூய்மை குறைந்தபட்சம்-98% அதிகபட்ச பிற இரகக்கலப்பு-0.20%, இராகி குறைந்தபட்ச முளைப்புப்திறன்-75% ஈரப்பதம் அதிகபட்சம்-12% புறத்தூய்மை குறைந்தபட்சம்-97%, உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு குறைந்தபட்ச முளைப்புத்திறன்-75% ஈரப்பதம் அதிகபட்சம்-9% புறத்தூய்மை குறைந்தபட்சம்-98% நிலக்கடலை குறைந்தபட்ச முளைப்புதிறன்-70% ஈரப்பதம் அதிகபட்சம்-9% புறத்தூய்மை குறைந்தபட்சம்-96%,



எள் குறைந்தபட்ச முளைப்புத்திறன்-80%, ஈரப்பதம் அதிகபட்சம்-9% புறத்தூய்மை குறைந்தபட்சம்-97%, இது போன்ற விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்வதன் மூலம் நல்விளைச்சலை பெறலாம். விதைப்பு செய்யவுள்ள விதைகள் தரமானதாக உள்ளதா என்பதை கண்டறிந்து விதைத்திட வேண்டும். மேலும் சரியான ஈரப்பத்தை அறிந்து விதைகளை சேமிப்பதன் மூலம் பூச்சி, பூஞ்சானத் தாக்குதலிருந்து பாதுகாத்து விதைகளை அதிக நாட்களுக்கு முளைப்புத்திறன் குறையாத பாதுக்காக்கலாம். 


அதற்காக விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யப்படவுள்ள, விதைக் குவியல்களிலிருந்து 100 முதல் 250 கிராம் அளவுள்ள விதை மாதிரி விதைகளை எடுத்து மூத்த வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், மாவட்ட மைய நூலகம் அருகில், துறைமங்கலம், பெரம்பலூர்-621220 என்ற முகவரிக்கு அனுப்பி விதைகளை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.


விதையின் சுத்தத்தன்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகின்றது. நன்கு சுத்தமான தரமான விதைகளை பயன்படுத்துவதால் வாலிப்பான நாற்று, பூச்சி நோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெற முடியும்.



மேலும் நேரடிவிதைப்பாக இருக்கும் பட்சத்தில் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர் எண்ணிக்கை இருந்தால் தான் அதிக மகசூல் எடுக்கமுடியும். முளைப்புத் திறன் பரிசோதனையில் நன்கு வாலிப்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், இறந்த விதைகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை கண்டறியலாம். மேலும் முளைப்புத்திறன் பரிசோதனையின் மூலம் தேவையான விதை அளவை தீர்மானிக்கமுடியும்.


ஒரு பணி விதை மாதிரியினை ஆய்வு செய்திட ஆய்வுக் கட்டணமாக ரூ.30/- மட்டுமே செலுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். எனவே விதைக்கும் முன் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க வேண்டும் என திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் மனோன்மணி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


மேலும் விவரங்களுக்கு விதை பரிசோதனை நிலைய முகவரிக்கோ அல்லது கைபேசி எண். 95970 55342/96298 94098ல் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.


மேலும் படிக்க....


நெற்பயிரில் எலி மேலாண்மை மற்றும் எலிகளை கட்டுப்படுத்தும் முறை!!


பருவமழையால் வரப்பை 4 அடி உயர்த்தி மழைநீரைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!!


மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் விவசாயிகள் பயன் பெற வேளாண்துறை அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments