மேம்படுத்தப்பட்ட இரகங்களின் விதை உற்பத்தி மற்றும் விதைப் பரிசோதனை முறைகள்!!

 


மேம்படுத்தப்பட்ட இரகங்களின் விதை உற்பத்தி மற்றும் விதைப் பரிசோதனை முறைகள்!!


இந்தியாவில் 150 முதல் 200 விதை நிறுவனங்கள் செயல்பட்டு வந்த போதிலும் 25 சதவிகித விதைத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய இயலுகிறது. மீதமுள்ள 75 சதவிகித விதைகள் விவசாயிகள் சேமித்து வைத்துள்ள விதைகளால் பூர்த்தி செய்யப்படுகின்றன.

 

விதை உற்பத்தி முறைகள்


விதை உற்பத்தி என்பது மேம்படுத்தப்பட்ட இரகங்களின் விதைகளை துரிதமாக பெருக்கி, உரிய நேரத்தில் உரிய விலையில் விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே ஆகும். விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் விதை உற்பத்தி முறைகள் குறித்து போதிய அளவு தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டும். 



விதை உற்பத்தி மேற்கொள்வதற்கு இடத்தேர்வு, பயிர் மற்றும் இரகம் தேர்வு செய்தல், பயிர் விலகு தூரம், நடவு விகிதம், அறுவடை, சுத்திகரித்தல், விதை பரிசோதனை போன்றவை ஆகும்.

 

மேற்கூறிய தொழில்நுட்பங்களுடன் விவசாயிகள் தங்களின் நிலங்களை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறையின் மூலம் விதைப்பண்ணைக்கு பதிவு செய்து விதைச்சான்று நடைமுறைகளை பின்பற்றி விதை உற்பத்தி செய்யலாம். அவ்வாறு விதை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. 


மேலும் விதை உற்பத்தி செய்ய மத்திய அரசாங்கமும், நபார்டு வங்கியும் சிறு தொழில் அமைச்சகமும் எண்ணற்ற உதவிகளை செய்கின்றன. இதன் மூலமும் விவசாயிகள் விதை உற்பத்தி செய்து நல்ல இலாபம் ஈட்டலாம்.

 


விதைப் பரிசோதனை முறைகள்


விதையே விளைச்சலின் ஆதாரம், சொத்தைப் போல வித்தைப் பேணு, என்ற கூற்றிற்கு இணங்க விவசாயத்திற்கு முதன்மை இடுபொருளான விதையின் தரத்தினை அறிய கீழ்க்கண்டவாறு விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.

 

தரமான விதையானது இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச விதை சான்றளிப்புத் தரத்திற்கு ஏற்ற புறத் தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் மற்றும் விதை நலத்துடன் கூடிய வீரியம் கொண்டிருக்க வேண்டும். 


விதையின் புறத்தூய்மை என்பது குறிப்பிட்ட பயிர் விதையைத் தவிர பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களின் கலப்பு இல்லாமல் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பயிரின் விதைகளையும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஈரப்பதத்திற்கு உலர்த்தி சேமிக்க வேண்டியது அவசியமாகும். 



முளைப்புத்திறன் என்பது நாம் விதைக்கும் விதையில் எவ்வளவு விதைகள் நன்கு முளைத்து நல்ல செடிகளைக் கொடுக்கின்றன என்பதைக் குறிக்கின்றது. மேலும் இவ்விதைகளில் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களின் தாக்குதலின்றி நல்ல வீரிய செடிகளை உற்பத்தி செய்பவைகளாக இருத்தல் வேண்டும். 


விவசாயிகள் விதை உற்பத்தி செய்து இவ்வாறு தரமான சான்று பெற்ற பின்பு விதைப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு தரமான விதைகளைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு விருதுநகர் மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலர் சி.சிங்கார லீனா, வேளாண்மை அலுவலர்கள் இரா.இராமசாமி மற்றும் பா.சாய்லெட்சுமி சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க....


பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேளாண் துறை ஆலோசனை!!


மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1800 வரை கிடைக்க வாய்ப்பு!!


தை பட்டத்தில் உளுந்து சாகுபடி! எந்தெந்த இரகங்களுக்கு எவ்வளவு மகசூல் கிடைக்கும்?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments