பார்பரி வெள்ளாடுகள் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்!!



பார்பரி வெள்ளாடுகள் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்!! 


உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாகக் காணப்படும் இந்த பார்பரி இன வெள்ளாடுகள் குஜராத் மாநிலத்திலும், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்திலும், ஜூலம் மற்றும் சர்கோதா போன்ற இடங்களிலம் அதிகமாக இருக்கிறது. பாரி, சாய் பாரி, தோரி பாரி, டிட்ரி பாரி, வாடி பாடி போன்ற பல்வேறு பெயர்களும் இவ்வகை ஆடுகளை அந்தந்தப் பகுதிகளுக்கேற்றவாறு இதனை அழைக்கின்றனர்.

 

இறைச்சிக்காகவும் பாலிற்காகவும் வளர்க்கப்படுகின்ற இவ்வகை ஆடுகள் வடமேற்கு பகுதிகளில் வறண்ட இடங்களிலும் மிதமான வறண்ட பகுதிகளிலம் அதிகமாகக் காணப்படுகிறது. சோமாலியாவின் பெர் பிரா பகுதியில் இது தோன்றியதாகவும் பலரால் சொல்ப்படகிறது. ஆனால் இந்தியாவில் ஆக்ரா ஏட்டா, இட்டாவா பகுதிகளில் இவ்வினம் பரம்பரையாக பல்கிப் பெருகி வளர்ந்து வந்திருக்கிற என்பதற்கான சான்றுகளும் இருக்கின்றன்.

 


சிறிய அளவிலான மற்றும் நடுத்தர உடல்வாகும் கொண்ட இவ்வகை ஆடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது. கண்கள் கவர்ச்சிகரமாகவும் சற்றே வெளித்தள்ளிய வண்ணமும் தோற்றமளிக்கிறது. ருசிகரமான இதன் இறைச்சி அப்பகுதி மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

 

இவ்வின வெள்ளாடுகளின் நிறம் வெண்மையாக இரந்தாலும் உடலில் பல்வேறு இடங்களில் தங்க நிறத்திட்டுக்கள் ஆட்டிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. காதுகள் சற்று சிறியதாகவும் விரைத்த தன்மையோடும் காட்சியளிக்கின்றது.

 

பாலிற்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்ற இவ்வகை ஆடுகள், தீவர விவசாயிகளாலும், பகுதி நேர வளர்ப்பாளர்களைக் கொண்டு இனவிருத்து செய்யப்படுகின்றது. கொம்புகள் சிறயதாகவும், நேராகவும் சில ஆடுகளுக்கு சுருளாகவும் அமைந்திருக்கின்றது.

 


பால் மடியைப் பொறுத்தவரைநன்கு பருத்தும் சரியான வளரச்சி பெற்றதாகவும் அமைந்திருக்கிறது. சாம்புகள் கூம்பு வடிவத்தில் சிறிது நீண்டபடி அமைந்திருக்கிறது. கிடாக்களின் சராசரி எடை 35 முதல் 37 கிலோவாகவும், பெண் குட்டிகளின் எடை 22 முதல் 25 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கிறது. பாலின் அளவு சராசரியாக தினசரி ஒரு லிட்டர் அளவில் தான் இருக்கும்.

 

பரண்களிலும் கட்டுத்கரையில் ஒரே இடத்தில் வைத்தும் வளர்ப்பதற்கு ஏற்ற இனம் இந்த பார்பரி. 20 முதல் 22 மாதங்களுக்குள் முதல் முறையாக குட்டிகளை ஈனுகின்ற திறன் பெற்றது. மீண்டும் ஏறக்குறைய 10 மாதங்கள் கழித்தே இரண்டாம் முறை குட்டிகளை ஈனுகிறது. ஈன்ற குட்டிகளின் எடை 3 கிலோவிற்குள் இருக்கிறது. பாலிற்காகவும், இறைச்சிக்காகவும், பொருளாதார நிலையில் உயர்வு பெறுவதற்கும் இதனை வளர்க்கலாம்.

 


தொடர்புக்கு : டாக்டர் கே.வி.கோவிந்தராஜ், கால்நடை ஆராய்ச்சியாளர், ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம். 98427 04504.


மேலும் படிக்க....


சுர்தி வெள்ளாடு வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்!! சுர்தியின் சிறப்புகள் என்ன?


3,000 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் ரூ. 2 லட்சம் வரை கடன்- கால்நடைத்துறை தகவல்!!


கிசான் கிரெடிட் கார்டு KCC கால்நடை வளர்ப்புக்கு வட்டிதொகை முழுவதும் தள்ளுபடி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments