நெல் பயிர் பாதுகாப்பு முறைகளும், அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளும்!!
விருதுநகர்
மாவட்ட விவசாயிகள் நெல் பயிர் பாதுகாப்பு குறித்தும், அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள்
குறித்தும் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் த.சுப்பாராஜ்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்.
குருத்துப் பூச்சி : பூச்சி விபரம்
அந்து பூச்சிகள் நெல் தோகையின் நுனி பகுதியில் முட்டைகளை குவியலாக இட்டு மஞ்சள் நிற பஞ்சு போன்ற உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெண் பூச்சியும் 50 முதல் 80 முட்டைகள் கொண்ட 2 முதல் 3 குவியல்களை இடும்.
முட்டை பருவம் 5 முதல் 8 நாட்கள். முட்டையிலிருந்து வரும் இளம் புழுக்கள் வெள்ளை நிறத்திலும், வளர்ச்சியடைந்த புழுக்கள் மஞ்சள் நிறத்தில் (மஞ்சள் நிற தண்டு துளைப்பான்) இளஞ்சிவப்பு (இளஞ்சிவப்பு நிற தண்டு துளைப்பான்) நிறத்திலும் காணப்படும். புழு பருவம் 33 முதல் 44 நாட்கள்.
நன்றாக வளர்ச்சியடைந்த புழுக்கள் தண்டின் துவாரத்தினுள் இளஞ்சிவப்பு நிறத்தில் கூடு கட்டி கூட்டுப் புழுவாக மாறுகிறது. கூட்டுப்புழு பருவம் 6 முதல் 10 நாட்கள். வருடத்திற்கு 4 தலைமுறைகள் தோன்றுகின்றன. அந்து பூச்சிகள் 8 கி.மீ வரை பறக்கும் தன்மையுடையது.
தாக்குதல் அறிகுறிகள்
தாக்கப்பட்ட இளம் பயிரில், நடுக்குருத்து காய்ந்திருக்கும். குருத்தை பிடித்து இழுத்தால் கையோடு வந்துவிடும். கதிர் வெளிவரும் பருவத்தில் இதன் தாக்குதல் இருந்தால் வரும் கதிர் ‘வெண் கதிராக” இருக்கும்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிலவும் குறைந்த
பகல் நேர வெப்பநிலை, அதிகமான ஈரப்பதம், குளிர்ந்த சீதோஷ்ண நிலை இப்பூச்சிகளின் பெருக்கத்திற்கு
காரணமாகும்.
பொருளாதார சேதநிலை
நாற்றாங்கால்
– 2 முட்டை குவியல்கள்/ச.மீ
வளர்ச்சி பருவம்
– 10 சதவீதம் நடுக்குருத்து காய்ந்திருத்தல்
கதிர் பருவம்
– 2 சதவீதம் வெண்கதிர்.
தடுப்பு முறைகள்
முட்டை குவியல்களை சேகரித்து அழித்தல். இரவு நேரங்களில் விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்திழுத்து அழித்தல். இனக்கவர்ச்சிப் பொறி 5 எண்கள்/ஏக்கர் அளவில் வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்திழுத்து அழித்தல்.
அந்து பூச்சிகள் நடமாட்டம் இருக்கும் போது டிரைக்கோ கிரம்மா
ஜப்பானிகம் முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 2 சிசி வீதம் வயலில் விட வேண்டும். 1 வார
இடைவெளியில் 3 முறை இட வேண்டும்.
பொருளாதார சேத
நிலைக்கு மேல் தாக்குதல் இருந்தால் கீழ்கண்ட பூச்சி கொல்லிகளில் ஏதேனும் ஒன்றினை ஏக்கருக்கு
கைத்தெளிப்பான் – 200 லிட்டர்/விசை தெளிப்பான் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து
கட்டுப்படுத்தலாம்.
கார்டாப் ஹைட்ரோகுளோரைடு
– 50 SP 400 கிராம்
குளோர் ஆன்ட்ரனலிபுரோல்
– 18.5 SC 60 மி.லி.
புளுபென்டியமைடு
– 39.35 SC 20 மி.லி.
தயமீதாக்சம்
– 25 WG 40 கிராம்
குளோர்பைரிபாஸ்
– 20 EC 500 மி.லி.
இவ்வாறு அந்த
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேளாண் துறை ஆலோசனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...