நெல் பயிரில் நோய் தாக்குதல் நேரடி கள ஆய்வு! மேலாண்மை முறைகள்!!
நெல் பயிரில் நோய் தாக்குதல் குறித்து கோபி, வேளாண்மை உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன், நேரடி கள ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஈரோடு மாவட்டம், கோபி வட்டாரத்தில் 4000 எக்டருக்கும் மேல் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அதிக மழை பொழிவு மற்றும் மேக மூட்டமான சீதோசன நிலை காரணமாக நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுகிறது.
குறிப்பாக கீழ் பவானி மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் உள்ள நெல் பயிர் பரப்பில் இலைக் கருகல் நோய், குலை நோய் மற்றும் நெல் பழ நோய் ஆகியவற்றிற்கான முதற் கட்ட தாக்குதல்கள் தென்படுகிறது. குறிப்பாக பாக்டீரியல் இலைக் கருகல் என்ற நோய் பரவத் தொடங்கியுள்ளது. இதனை உடனடியாக மருந்து தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
இலைக் கருகல்
நோய் அறிகுறிகள்
நோய்க் காரணியான பாக்டீரியா நெற்பயிரில் வாடல் அல்லது இலைக் கருகலை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் நட்ட 3-4வது வாரங்களில் தோன்றுகிறது. நெற்பயிரில் வாடல் முழுச் செடியையோ அல்லது ஒரு சில இலைகளையோவாடச் செய்யும்.
மேலாண்மை முறைகள்
சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50ம் நாளில் இலை வழியாகத் தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
பரிந்துரை செய்யப்படும் தழைச் சத்தை யூரியா மூலம் மூன்று, நான்கு முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5 : 4 : 1 என்ற விகிதத்தில் கலந்து ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் மேலுரமாக இடவேண்டும்.
நோயின் தாக்குதல் தரம் 3 என்றளவில் இருக்கும் போது எக்டருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்றளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
நெல் குலை நோய்
இலைகளின் மேல்,வெண்மைநிறத்திலிருந்துசாம்பல் நிறமையபகுதியுடன் காய்ந்தஓரங்களுடன் கூடியகண் வடிவ புள்ளிகள் காணப்படும்.தீவிரதாக்குதலின் போதுபயிர் முழுவதும் எரிந்ததுபோன்றதோற்றமளிக்கும்.
இதையேகுலை நோய் என்கிறோம்.கதிர்
வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும்.மேகமூட்டமுள்ளவானம்,தொடர் மழைமற்றும் காற்றின்
ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சூழலில் இந்நோய் தீவிரமடையும்.
மேலாண்மை முறைகள்
1) வயல் மற்றும்
வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.
2) குறைந்த
தாக்குதலாக இருந்தால் கார்பென்டசிம் 1.0 கிராம்/லிட்டர் என்றளவில் தெளிக்க வேண்டும்.
நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் இடுவதை தாமதமாக செய்ய வேண்டும்.
3) சூடோமோனாஸ்
கலவை பொடியை 5கிராம்/லி என்றளவில் மூன்றுமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
4) இரசாயன பூஞ்சாணக்
கொல்லி மருந்துகளான டிரைசைக்ளோசோல் 75றுP – 200கி/ஏக்கர் அல்லது அசாக்ஸி ஸ்டோரோபின்
25ளுஊ – 200மிலி/ஏக்கர் என்றளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
நெல் பழ நோய்
நெல் பழ நோய்
பூஞ்சாணத்தால் உண்டாகிறது. சாதாரணமாக இந்நோய் நெற் கதிரின் ஒரு சில நெல் மணிகளில் மட்டுமே
தென்படும். இந்நோய் பாதிக்கப்பட்ட நெல் மணிகள் மஞ்சள் நிறமாக மாறி மிருதுவான பந்து
போன்று 1 செ.மீ. அளவுக்கு வளரும்.நெல் மணிகள் முதிர்ச்சி அடையும் போது மஞ்சள் நிறம்
கரும் பச்சை நிறமாக மாறும்.
மேலாண்மை முறைகள்
நெல் விதைகளை
கார்பெண்டசிம் என்ற பூஞ்சாணக் கொல்லியை பயன்படுத்தி ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்றளவில்
விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
1) பாதிக்கப்பட்ட
நெல் மணிகளை நோயின் ஆரம்ப நிலையில் அழிக்க வேண்டும்.
2) இதனால் இந்நோய்
அருகில் உள்ள நெற்பயிர்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தலாம். தழைச்சத்தை பிரித்து இடைவெளிவிட்டு
இட வேண்டும்.
3) நெற் பயிர்
புடைப் பருவத்தில் இருக்கும் போது ஒரு முறையும் 50% பூக்கும் பருவத்தில் இருக்கும்
போது ஒரு முறையும் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு பூஞ்சாணக் கொல்லியை தெளிப்பதன் மூலம் இந்நோயை
முழுவதுமாக கட்டுப்படுத்தலாம்.
பிரப்பிகொனசோல்
25நுஊ எக்டருக்கு 500 மிலி (அ) காப்பர் ஹைட்ராக்ஸைடு 77றுP ஹெக்டருக்கு 1.25 கிலோ பயன்படுத்திக்
கட்டுப்படுத்தலாம்.
4) இந்நோய்
அதிகமாக தாக்கும் இடங்களில் முன்பருவ நடவு செய்ய வேண்டியது மிகமிகஅவசியம்.
5) பயிர்கள்
ஈரமாக இருக்கும் பொழுது வயல்களில் உரம் இடுதல் மற்றும் களை எடுத்தல் போன்ற செயல்களை
தவிர்க்க வேண்டும்.
6) அறுவடைக்கு
முன்பு பழ நோய் பாதிக்கப்பட்ட மணிகளை பிரித்து எடுத்து அழிப்பதன் மூலம் அடுத்தப் பருவத்திற்கு
வயலில் நோயின் தீவிரமாவதை தடுக்க முடியும்.
இவ்வாறு கோபி
வேளாண்மை உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
நெற்பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...