நெல் – III ரபி பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!
வேளாண்மை –
உழவர் நலத்துறை மூலம் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு
2021-22ம் ஆண்டு சிறப்பு மற்றும் ரபி பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அறிவிக்கை செய்யப்பட்ட
கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து
விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.
பயிர்ககடன்
பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் (Voluntary
Scheme) அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.
பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம்.
விதைப்பு முதல்
அறுவடை வரை உள்ள பயிர் காலத்திதற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி
மழை. மண்சரிவு. வெள்ளம் போன்ற உள்ளுர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும இழப்பு போன்ற இனங்களில்
பயிர் காப்பீடு வழங்கப்படும்.
கடன் பெறும்
விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
விவசாயிகளின் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம். கிராம நிர்வாக அதிகாரியிடம்
(வி.ஏ.ஓ) பெறப்பட்ட நெல் – III, மக்காச்சோளம் -II, பருத்தி – II , சோளம், நிலக்கடலை,
எள் மற்றும் கரும்பு பயிர் சாகுபடிக்கான அசல் அடங்கல். வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்
பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்
போது பிரீமியத்தொகையும் கீழ்கண்ட விவரப்படி உரிய தேதிக்குள் செலுத்த வேண்டும்.
எனவே விவசாயிகள்
RPMFBY திட்டத்தின்கீழ் நெல் – III, மக்காச்சோளம் – II, பருத்தி – II, சோளம், நிலக்கடலை,
எள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு ரபி பருவத்திற்கு கீழ்கண்ட உரிய தேதிக்குள்
பதிவு செய்யுமாறு வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்
RPMFBY –
2021-22- சிறப்பரபி பருவ பயிர்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகை மற்றும்
பிரீமியம் செலுத்த கடைசி தேதி விவரங்கள்
பிர்க்கா வாரியாக
வ.எண் பயிர்கள்
பயிர் காப்பீட்டுத் தொகை ஏக்கர் (ரூ) பிரிமியத் தொகை ஏக்கர் (ரூ) பயிர் காப்பீடு செய்யும்
காலம் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்.
நெல் – III
பயிர் காப்பீட்டுத்
தொகை ரூ 32,550.20 பிரிமியத் தொகை ரூ .488.25 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 1.12.2021
முதல் 31.01.2022 வரை,
மக்காச்சோளம்
II
பயிர் காப்பீட்டுத்
தொகை ரூ.24750.20 பிரிமியத் தொகை ரூ .371.25 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.12.2021.
பருத்தி II
பயிர் காப்பீட்டுத்
தொகை ரூ. 7631.98 பிரிமியத் தொகை ரூ. 381.59 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்
15.12.2021.
நிலக்கடலை
பயிர் காப்பீட்டுத்
தொகை ரூ. 23,750.20 பிரிமியத் தொகை ரூ.356.25 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்
15.12.2021.
எள்
பயிர் காப்பீட்டுத்
தொகை ரூ. 8,150.20 பிரிமியத் தொகை ரூ.122.25 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்
31.12.2021.
சோளம்
பயிர் காப்பீட்டுத்
தொகை ரூ. 12,150.20 பிரிமியத் தொகை ரூ.182.25 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.12.2021.
கரும்பு
பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 52,000 பிரிமியத் தொகை ரூ. 2,600 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 31.08.2022.
ரபி பருவத்தில்
அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காக்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு மட்டும் தான் பயிர்க்
காப்பீடு செய்ய இயலும். அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காக்களை தெரிவதற்கு அருகிலுள்ள
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலத்தினை விவசாயிகள் தொடர்பு கொண்டு அதன்பின்பு
பயிர்காப்பீடு செய்து பயன் பெறுமாறு மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்! வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...