ஒருங்கிணைந்தப் பண்ணை அமைக்க 50 விவசாயிகளுக்கு தலா ரூ. 45,000 மானியம்!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் 50 விவசாயிகளுக்கு வேளாண்துறை பல்வேறுத் திட்டங்களில் கீழ் மானியம் வழங்கப்பட்டது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த
பண்ணையத் திட்டம் மூலம் மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு வேளாண் துறைகளுக்கான
மானியங்களை தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் வழங்கினார்.
தமிழ்நாடு
அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித்
திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்
திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த தலா 7 விவசாயிகள் வீதம்
தேர்வு செய்யப்பட்டனர்.
வேளாண் துறையின் மூலம் ரூ.31,500
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் ரூ.5000 மானியமும், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் பத்து ஆடுகளும் வழங்கப்பட்டன. மேலும் ஒரு பசு மாடு மற்றும் 10 கோழிகள் ரூ.31 ஆயிரத்து 500 மானியத்திலும் வழங்கப்பட உள்ளன.
இத்துடன் மர வளர்ப்பிற்கு ரூ.250 ம் தீவனப்புல் மற்றும் விதைகள் ரூ.750 மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் பழக் கன்றுகள் வீட்டு காய்கறி தோட்டம் விதைகள் மற்றும் தேனீ வளர்ப்பு பெட்டிகள் 2 எண்கள் மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் மூலம் ரூ.45.000
இவ்வாறு ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் மூலம் ரூ.45 ஆயிரம் 50 சதம் மானியமாக வழங்கப்படுகிறது.
வேளாண் துறையின் மூலம் வழங்கப்படும் நெல் சான்று விதை ஏஎஸ்டி16,
நெல் நுண்ணூட்டம் சூடோமோனஸ் பவேரியா மற்றும் திரவ அசோஸ் பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா
மற்றும் வரப்பில் உளுந்து சாகுபடிக்காக 3 கிலோ ஆடுதுறை 5 உளுந்து ஆகியவை தஞ்சை மாவட்ட
வேளாண் துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் பாலசரஸ்வதி வழங்கினார்.
நிகழ்ச்சி கலந்தாய்வு
இந்நிகழ்ச்சியில்
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி
மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் பூமிநாதன் சுரேஷ் தினேஷ் மற்றும் கார்த்தி ஆகியோர்
கலந்து கொண்டனர்.
மேலும்
படிக்க....
விவசாயம் மற்றும் தோட்ட வேலைகளை எளிதாக்குவதற்கு ட்ரோன் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியம்!!
பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...