Random Posts

Header Ads

நெல் சாகுபடியில் பழைய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம்!!



நெல் சாகுபடியில் பழைய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம்!!


கடந்த சில ஆண்டுகளாக நமது நெல் சாகுபடியில் பழைய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வது பெருகி வருகிறது. குறிப்பாக சிகப்பு (Red), கருப்பு (Black) மற்றும் பழுப்பு (Brown) நெல் ரகங்கள் அதிகளவில் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது. 


குறிப்பாக நமது உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் அதிகளவில் சாகுபடி செய்வதும் விரும்பி வாங்கி உண்பதும் பெருகி வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல் நாட்டுப்புற அரிசி (Folk rice) ரகங்கள் என்ற பெயரில் நமது நாட்டின் பெருநகர அங்காடிகள் மற்றும் வணிக இணையதளங்கள் வாயிலாக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 



உலகின் இரண்டாவது அதிகளவில் அரிசி உட்கொள்ளும் நமது நாட்டில் இப்பாரம்பரிய அரிசிகள் தற்போது சூப்பர் உணவுகளாக (Super foods) விற்பனை செய்யப்படுகிறது. தில்லியை தலைமை இடமாகக் கொண்ட மதர் இந்தியா நிறுவனர் கடந்த 2018 முதல் கருப்பு நிறத்திலான அரிசியை வடகிழக்கு மாநிலங்களில் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. 


இதனை அதிக விலை கொடுத்து வாங்க ஒரு பகுதி மக்கள் வாங்க தயாராக உள்ளனர். சுமார் கிலோ 450 வரை விற்பனை செய்யப்படும் இந்த கருப்பு நிற அரிசியை போல் கேரளாவில் இருந்து பாரம்பரிய சிகப்பு அரிசியை நமது தலைநகரான தில்லியில் விற்கவும், வணிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இப்பாரம்பரிய அரிசி ரகங்கள் குறைந்த அளவில் சாகுபடி செய்யப்படுவது மற்றும் சந்தையின் தேவைக்கேற்ப வழங்க முடியாத சூழல் பாரம்பரிய நெல் சாகுபடியில் பெரிய தடைகளாக உள்ளது. 



கேரளாவில் செயல்படும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்களை பருவ மாற்றத்திற்கான திறன் வாய்ந்த அரிசிகள் என்று கண்டறிந்து தற்போதைய பளபளப்பான அரிசி (Polished rice) மாற்றாக தவிடு கொண்ட அரிசியை (Rice with Bran) பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி விற்பனை செய்து வருகிறது. 


இதன் உடல் நலத்திற்கான நன்மைகள் பற்றிய விளக்கக்ஙளுடன் மேற்கொள்ளப்படும் பரப்புரை “நமது அரிசியை பாதுகாப்போம் என்று மேற்கொள்ளப்பட்டு தற்போது சுமார் 1500 நாட்டு ரகங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மீட்கவும், மீண்டும் சாகுபடி பணிகளை துவங்கவும் பெரிது துணை புரிந்துள்ளது. 


கடந்த 2004ம் ஆண்டை சர்வதேச நெல் ஆண்டாக அறிவித்ததைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தின் நெல் சாகுபடி செய்யும் மாநிலங்களின் பங்குகளுடன் கேரளாவில் கூடி நெல் சாகுபடி செய்யும் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அறிவை பாதுகாப்போம் என்று அறிவித்துப் பிரகடனம் போன்றவை இன்று பல நாட்டு ரகங்களைப் பாதுகாக்க பெரிதும் உதவி வருகிறது. 



தமிழகத்தின் “மாப்பிள்ளை சம்பா பாரம்பரிய நெல் ரகம் மீட்பு போன்றவை ஊக்கம் பெறவும், அதன் சாகுபடி பரப்பளவு பல தமிழக மாவட்டங்களில் பெருகவும் துணை புரிந்துள்ளது. தற்போது கடந்த சில பருவங்களாக தமிழக அரசும் பாரம்பரிய நெல் ரகங்களைக் கொள்முதல் செய்வது தொடரும் பட்சத்தில் அதிகளவில் தமிழக விவசாயிகள் நமது பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 


நமது பாரம்பரிய அரிசியில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி காணப்படுவதால் குறிப்பாக வைட்டமின் B, இரும்புச் சத்துக்கள் மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளதால் ஊட்டச்சத்துக் கிடைக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாமல் செய்வதால் நம்முடைய நாடு மற்றும் மாநிலங்களில் சந்தித்து வரும் ஊட்டச்சத்துப் பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் பிரச்சனைகளுக்கு சிறந்தத் தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 


எனவே இனி வருங்காலங்களில் நமது நாடு சந்தித்து வரும் பருவ மாற்றுப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகவும், நமது ஊட்டச்சத்துப் பிரச்சனைகள் மற்றும் பெருகி வரும் சர்க்கரை நோயாளிகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளைத் தரும் நமது பாரம்பரிய நெல் ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்து, வேளாண் சந்தைகளின் தேவைகளைச் சந்தித்தும் போதும் நமது தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை.

 

தகவல் வெளியீடு


முனைவர் தி.ராஜ்பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

 

மேலும் படிக்க....


நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்! வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை!!


விவசாயிகள் நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை தேர்வு செய்து அதிக மகசூல் பெறலாம்!!


பாரம்பரிய பூச்சிக் கட்டுப்பாடு முறைகள்! பூச்சி சேதத்தைத் தடுக்க வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments