நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள்! வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை!!
புதுக்கோட்டை
மாவட்டம், திருமயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.உமா விடுத்துள்ள செய்தி குறிப்பில்
தற்பொழுது சம்பா நெல் அறுவடை தொடங்கவிருப்பதால் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடித்து நெல்
தரிசில் உளுந்து சாகுபடி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்
தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்
இரகங்கள்
- வம்பன் -6,
- கிள்ளிக்குளம்-1,
- ஆடுதுறை-6,
- ஆடுதுறை-3
விதையளவு மற்றும் விதைக்கும் காலம்
30 கிலோ எக்டர், ஐனவரி மூன்றாம் வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை.
விதை
நேர்த்தி
1
கிலோ விதைக்கு கார்பென்டசீம் 2 கிராம் என்றஅளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும். கார்பென்டசீம்
விதையை விதை நேர்த்தி செய்த பின்பு 24 மணி நேரம் கால இடைவெளி அவசியம்.
1
ஏக்கருக்கு தேவையான விதைகளுக்கு நுண்ணீர் உரங்களான ரைசோபியம் 200 கிராம். பாஸ்போபாக்டீரியா
200 கிராம் மற்றும் எதிர் பூஞ்சாணம் உயிர் கொல்லிகளான டிரைக்கோடர்மா விரிடி 40 கிராம்
அல்லது சூடோமோனஸ் ப்ளோரோசன்ஸ் 100 கிராம் என்ற அளவில் குளிரிந்த அரிசி கஞ்சியை பயன்படுத்தி
விதை நேர்த்தி செய்து நிலலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
எதிர்
உயிர் கொல்லிகளை பயன்படுத்தினால் கார்பென்டசிம் பயன்படுத்த வேண்டியது இல்லை
விதைத்தல்
பயிர்
எண்ணிக்கையை பராமரிப்பதற்கு சரியான ஈரபதத்தில் விதைத்தல் மிகவும் அவசியம்.
விதைகளை நெல் அறுவடைக்கு சுமார் 7 முதல் 10 நாட்களுக்கு முன் சரியான ஈரபதத்தில் மெழுகு பதத்தில் நிலத்தில் தூவவேண்டும்.
உளுந்து விதைகளில் உள்ள சம்பா மற்றும் தாளடி வயல்களில் நில தயாரிப்பின்
போது நடவுக்கு முன்பு நிலத்தை நன்கு சமன்படுத்துதல் அவசியம். நெல் தரிசு பயிர்களில்
பயிர் எண்ணிக்கையை பராமரிக்க இது மிகவும் உதவுகிறது.
நெல்
அறுவடைக்கு முன்பு பயறு தெளிக்க முடியாமல் போனால் அறுவடை செய்த பிறகு நீர் பாய்ச்சி
சரியான ஈரபதத்தில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியில் ஒரு வரிசையில் செடிக்கு செடி
10 செ.மீ இடைவெளியில் இருக்குமாறு கைவிதைப்பு மூலம் வயலில் விதைகளை ஊன்றி விடலாம்.
களைகொல்லி
தெளித்தல்
களைகள்
2 முதல் 3 இலை பருவத்தில் இருக்கும் போது விதைத்த 15 முதல் 20 வது நாள் இமாசெதபைர்
10மூ 500 மிலி எக்டர். குயிசலோபாப் எத்தில் 10 மூ 500 மிலி எக்டர் என்ற அளவில்
கைத்தெளிப்பானை கொண்டு தெளிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து
மேலாண்மை
டை
அமோனியம் பாஸ்பேட் என் ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல் என்.ஏ.ஏ வளர்ச்சி ஊக்கியை
40 மி.கி லிட்டர் என்ற அளவில் பூக்கும் பருவத்திற்கு முன்பும் 15 நாட்கள் கழித்தும்
தெளிக்க வேண்டும்.
5 கிலோ எக்டர் என்ற அளவில் பூக்கும் பருவத்தில் ஒருமுறை
அல்லது எஏபி 2 சதவீதக் கரைசலை பூக்கும் பருவத்திலும் பின்பு 15 நாட்கள் கழித்தும் கைத்
தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
சாலிசிலிக்
அமிலம் 100 மி.லி லிட்டர் என்ற அளிவல் பூக்கும் பருவத்திற்கு முன்பும் 15 நாட்கள் கழித்தும்
தெளிக்க வேண்டும்.
நீர்
மேலாண்மை
பயிர்
வளர்ச்சியின் பின் பருவத்தில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க பண்ணைக்குட்டை அல்லது கிணற்று
நீரை மழை தூவுவான் அல்லது தெளிப்பு நீர்ப்பாசன முறை மூலம் தெளிக்கலாம்.
பயிர்
பாதுகாப்பு
காய்த்துளைப்பாணை கட்டுப்டுத்த 5 சத வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் அல்லது தயோடிகார்ப் 75 மூ றுP 625 கிராம் எக்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். வேரழுகல் மற்றும் வாடல் நோயை கட்டுப்படுத்த கார்பென்டசிம் 1 கிராம் லிட்டர் என்ற அளவில் தூரில் ஊற்றவேண்டும்.
சாம்பல் நோயை கட்டுப்படுத்த வேப்பஎண்ணெய்
3 மூ அல்லது வேப்பங்கொட்டைசாறு 5 மூ அல்லது யூக்கலிப்படஸ் இலைசாறு 10 மூ நனையும் கந்தகம்
1.5 கிலோ எக்டர் அல்லது புரப்பிகோனோசோல் 500 மிலி எக்டர் என்ற அளவில் நோய் தோன்றும்
தருவாயிலும் 10 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
அறுவடை
மற்றும் சேமித்தல்
முதிர்ந்த
நெற்றுகளை அறுவடை செய்து விதைகளை 10 மூ ஈரபதத்திற்கு உலர்த்தி சேமிக்க வேண்டும். விதைகளை
சேமிக்கும் போது விதைகளுடன் ஊக்குவிக்கப்பட்ட களிமண் அல்லது வேப்பஎண்ணெய் 1:100 என்ற
விகிதத்தில் கலந்து சேமிக்க வேண்டும்.
மேலும்
படிக்க....
குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உளுந்து பயிரிடலாம்!!
தானியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...