தானியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை!!
புதுக்கோட்டை
மாவட்டம், திருமயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.உமா விடுத்துள்ள செய்தி குறிப்பில்
தற்பொழுது சம்பா நெல் அறுவடை நடந்து கொண்டு இருப்பதால் கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு முறைகளை
கடைபிடித்து தானியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சேமிக்கும்
தானியங்களை – பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்
தானியங்களை
அறுவடைக்கு பின் நன்றாக உலர்த்தி ஈரப்பதம் 8 முதல் 10 சதத்திற்குள் இருக்குமாறு நன்கு
காய வைத்து சேமிக்க வேண்டும்.
தானியங்களை
சேமிக்கும் கதிர்கள் மற்றும் அறைகளை நன்றாக சுத்தம் செய்து எந்தவித பூச்சிகள் மற்றும்
அதன் வாழ்க்கை பருவங்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நவீன
சேமிப்பு களஞ்சியங்கள் ,குறிப்பாக உலோக கதிர்களில் சிறு விவசாயிகள் தானியங்களை சேமித்து
வைத்து கொள்வது சிறந்தது.
தானிய
மூட்டைகளை தரையில் வைக்காது கட்டைகள் மற்றும் மூங்கில் பாய்களில் மீது அடுக்க வேண்டும்.
மூட்டைகள்
சுவட்ரை ஒட்டி இல்லாமல் தனிதனியாக அடுக்கடுக்காக நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக
வைக்க வேண்டும்.
தானிய
சேமிப்புக்கு பயன்படுத்தபடும் சாக்கு பைகள் புதியதாக அல்லது பூச்சி அற்றதாக இருக்க
வேண்டும்.
பழைய
சாக்கு பைகளை 0.1 சத கரைசலில் நனைத்து உலர்த்தி பின் உபயோகிக்கலாம்.
மூட்டைகளின்
மீது மாலத்தியான் 0.1 சதம் கரைசலை தானியங்கள் மேல் படாமல் அளவாக தெளித்து வரலாம்.
தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைகழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்படுகின்ற ஊக்குவிக்கப்பட்ட
களிமண்களை விதைகளுக்கு குறிப்பாக பயறுவகை பொருட்களுடன் 1:100 என்ற விகிததத்தில் (எடைக்கு
எடை) கலந்து வைப்பதால் பூச்சிகள் வராமல் காப்பற்றலம்.
பயறு
வகைகளான துவரை, உளுந்து, பாசி பயறு முதலியவற்றை வேப்பம் மற்றும் உணவு எண்ணெய்களுடன்
கலந்து வைப்பதன் மூலம் 1:100 (எடைக்கு எடை ) என்ற விகிதத்தில் பயறு வண்டு தாக்குவதை
கட்டுபடுத்தலாம். இதை தவிர வேப்பங்கொட்டை துளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில்
உபயோகித்து பயன் பெறலாம்.
பூச்சிகள்
மூட்டையினுள் காணப்பட்டால் அவற்றை அலுமினியம் பாஸ்பைடு மாத்திரை இட்டு (டன்னுக்கு)
(மூன்று மாத்திரை விதம்) பாலித்தீன் உறைகளால் மூடி ஐந்து நாட்களுக்கு வைப்பதன் மூலம்
அளிக்கலாம். பொதுவாக இந்த முறை பொது மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து தள்ளியுள்ளதானிய
கிடங்குகளிலும் அரசு தானிய கிடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தாவர
பொருட்கள்
தானியங்களில் பைரிதிரம், வேப்பம் விதை, பவுடர், வேம்பின் இலை முதலியவை, சேமிக்கப்படும்
பொருட்களில் உற்பத்தியாகும் பூச்சிகளை கொல்லக்கூடிய சக்தி வாய்ந்தவை. இவை மட்டுமின்றி
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய தாவர எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
தானியங்களை சாக்கு மூட்டைகளில் சேமித்து வைக்கும் போது சாக்குகளின் மேல் கீழ்க்கண்ட மருந்துகளை தெளித்தல் அவசியம். மாலத்தீயான் 50 சத ஈசி 10 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீர்,கலந்து 3லிட்டர் கலவையை 100 சதுர மீட்டர் பரப்பில் தெளித்தல்.
அடுக்கப்பட்ட
மூட்டைகளின் இடைவெளி பகுதியிலும் , சேமிப்பு அறையின் கதவு கவர்கள் ஆகியவைகளிலும் பூச்சிகொல்லி
மருந்துகளை பூச்சிகள் நடமாட்டம் அறிந்து தெளிக்க வேண்டும். (மாலத்தியான் 50 ஈசி 10மிலி
1 லிட்டர் தண்ணீர்)
மேலும்
படிக்க....
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தை பட்டத்திற்கான விலை முன்னறிவிப்பு!
குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உளுந்து பயிரிடலாம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...