குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உளுந்து பயிரிடலாம்!!
புதுக்கோட்டை
மாவட்டம், விராலிமலை வட்டார விவசாயிகள் குறைந்த செலவில் குறைந்த நாளில் அதிக மகசூல்
பெற உளுந்து பயிரிடலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நடப்பு
வருடம் நம் வட்டாரத்திற்கு அதிக மழை கிடைத்து அனைத்து கண்மாய்களும் நிரம்பி உள்ளதால்
அதன் அருகில் உள்ள கிணறுகளும் நீர் நிரம்பி காணப்படுகிறது. இதை பயன்படுத்தி நாம் அனைவரும்
கோடையிலும் நெல் சாகுபடி செய்ய ஆர்வமாக இருப்போம். ஆனால் இது நம் நிலத்தின் வளத்தையும்
குறைத்து நமது வருமானமும் குறைந்து விடும்.
ஏன்
என்பதற்கான விளக்கத்தினை இங்கே பார்ப்போம்
தொடர்ந்து
நெல்பயிர் சாகுபடி செய்யும் பொழுது அதன் வேரின் அளவுக்கு தண்ணீர் அதிகம் தேங்கி இருப்பதால்
மண்ணில் உள்ள சத்துகள் குறையும். அதை சரி செய்ய மீண்டும் ராசாயன உரங்களை பயன்படுத்தும்
போது நம் மண்ணின் வளம் கெடுகிறது.
தொடர்ந்து
ஒரே பயிர் சாகுபடி செய்யும் போது பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் குறையாமல் தாக்கும்.
இதனை கட்டுப்படுத்த அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நமது சுற்று
சூழல் பாதிக்கப்படுகிறது.
இந்த
ஆண்டு அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்து மகசூல் பெற்ற காரணத்தால் அடுத்து வரும்
பருவத்தில் நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி அடையும். அதன் காரணமாக நாம் செலவு செய்த அளவில்
கூட வருவாய் பெற இயலாது. இதனை தவிர்க்க நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து அல்லது
பாசிப்பயிறு சாகுபடி செய்தால் 70வது நாளில் நாம் குறைந்த செலவில் மகசூல் எடுத்து விடலாம்.
உளுந்து செடியை பிடுங்கும் பொழுது நீங்கள் அனைவரும் அதன் வேரில் முடிச்சு முடிச்சாக பார்த்து இருக்கலாம். அதில் வாழும் பாக்டீரியா காற்றில் உள்ள தழைச்சத்தை உறிஞ்சி எடுத்து மண்ணில் நிலை நிறுத்துகிறது.
அதன் மூலம் மண்ணின் வளம் கூடுகிறது. பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்கும் பொழுது பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.
அதோடு
முக்கியமாக அரசு ஆதார விலையாக, உளுந்துக்கு ரூ.63 ஓரு கிலோவுக்கு மற்றும் பாசிப்பயறுக்கு
ரூ.72.75 ஒரு கிலோவுக்கு நிர்ணயம் செய்துள்ளதால் அதிக வருவாய் பெறலாம்.
எனவே
விவசாய பெருமக்களும் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உளுந்து சாகுபடி செய்ய வேண்டி
அதற்கான விதைகளை பெற வேளாண்மை விரிவாக்க மையத்தை அனுகலாம் என வேளாண்மை உதவி இயக்குநர்
செல்வி. ப. தமிழ்செல்வி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும்
படிக்க....
பார்த்தீனியக் களைகளை பக்குவமாக உரமாக மாற்ற வேளாண்மை அறிவியல் நிலையம் அறிவுறுத்தல்!!
சிறு விவசாயிகள் பயன்பெற வேளாண் கருவிகளை உருவாக்கிய விவசாயி!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...