3 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்!!
வேளாண்மை
பொறியியல் துறை மூலமாக மானியத்துடன் கூடிய பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு மாற்று
மோட்டார் வழங்குதல் மற்றும் புதிய மின்மோட்டார் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக, விவசாயிகளின் நிலத்தடிநீரை பாசனத்திற்காக பெற உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும் பழைய திறனற்ற மின்மோட்டார் பம்ப் செட்டுகளுக்குப் பதிலாக புதிய மின்மோட்டார் பம்ப் செட்டும் மற்றும் புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு “மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம்” செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது.
அதில், ஏற்கனவே
EB இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற பம்ப் செட்டுகளை மாற்ற விரும்புபவர்கள், தற்போதுள்ள
EB பம்ப் செட்டுகள் எலக்ட்ரிக் மோட்டார் பம்ப் செட்டுக்கு மாற்ற விரும்புபவர்கள்
(8 இணைப்புகள் பெற்றுள்ளவர்களுக்கு மட்டும் ) , மின் இணைப்பு பெற்ற விவசாயிகளால்
புதிய ஆழ்துளை கிணறு / திறந்த வெளி கிணறு/ குழாய் கிணறு அமைத்து புதிய மின்மோட்டார்
பெற விரும்பும் விவசாயிகள் ஆவர்.
இத்திட்டத்தில் மின்மோட்டார்களை பெற, தலைமைப்பொறியாளர் (வே.பொ) சென்னை அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். இதில் 10 hp வரை மின்மோட்டார்கள் வாங்கலாம். அதற்கு 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000 வரை மானியம் இதில் எது குறைவோ அது பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.
2021-22ஆம் ஆண்டிற்கு பொது பிரிவில் – 33 பழைய மின்மோட்டார்களை மாற்றவும் 3 எண்கள்
புதிய மின்மோட்டார் பெறவும் , இந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு-3
எண்கள் பழைய மின்மோட்டார் மாற்றவும் 1 எண் புதிய மின்மோட்டார் வாங்கவும் ஆக மொத்தம்
40 எண்கள் , ரூ.4.00 லட்சம் மானியத்தில் வழங்கப்பட இலக்கு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலவரைபடம்,
சிறு விவசாயிகளுக்கான சான்று, (மூன்று ஏக்கர் வரை மட்டும்) பாஸ் போர்ட் சைஸ் போட்டோ,
விவசாயிகளின் வங்கி கணக்கு எண் மற்றும் மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை
ஆகிய விவரங்களுடன் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்
விண்ணப்பிக்கும் விவசாயிகள் பிரதான மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின்
கீழ் நுண்ணீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும் /அமைக்க விண்ணப்பதிருக்க வேண்டும்.
2021-22 ம் வருட கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்து
விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்
தெரிவித்துள்ளார்.
கூடுதல் விபரங்களுக்கு
செயற்பொறியாளர்
வேளாண்மை
பொறியியல்துறை
மாவட்ட ஆட்சியர் வளாகம்
தருமபுரி
04342296948,
9443636835
உதவி
செயற்பொறியாளர்
வேளாண்மை
பொறியியல் துறை
மாவட்ட ஆட்சியர் வளாகம்
தருமபுரி
04342
296132, 9443267032
உதவி
செயற்பொறியாளர்
வேளாண்மை
பொறியியல் துறை
ஒழுங்குமுறை
விற்பனைக் கூடம் வளாகம்
திருப்பத்தூர்
மெயின் ரோடு
அரூர்,
தருமபுரி மாவட்டம்
04346296077,
9442007040
மேலும்
படிக்க....
விவசாயிகள் மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க ரூ. 10,000 மானியம்! உடனே முந்துங்கள்..!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...