விவசாயிகள் மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க ரூ. 10,000 மானியம்! உடனே முந்துங்கள்!!
விவசாயிகளுக்கு
மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட
ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். மானியமாக ரூ. 10,000 வழங்கப்படுவதால், விவசாயிகள்
இந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாசனமே ஆதாரம்
நீரின்றி
அமையாது உலகு என்றார் வள்ளுவர். அதேபோல நீரின்றி விவசாயமும் சாத்தியமில்லை. விவசாயத்தின்
அடிப்படை ஆதாரமாகத் திகழும் இந்த நீரினை எடுக்க ஏதுவாக மின் மோட்டார் பம்பு செட்கள்
அமைக்க அரசு சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இது
குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
கிணறுகளிலிருந்து
பாசனத்திற்கு நீரினை இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் தொலை
நோக்கு திட்டத்தில் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ரூ.10
ஆயிரம் மானியம்
இந்தத்
திட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு
விவசாயிகளுக்கு, பாசன நீரை இறைத்திட புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க மானியம்
வழங்கப்படுகிறது.
இதேபோல்,
திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்புச் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு
செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள்
வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
தேவைப்படும்
ஆவணங்கள்
- சிறு,குறு விவசாயி சான்றிதழ்
- அடங்கல்
- கிணறு அமைந்துள்ள நிலவரை படம்
- மின்சார இணைப்பு அட்டைவிபரம்
- வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல்
மேலும் தொடர்புக்கு
எனவே,
இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள், உதவி
செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை அலுவலகத்திலும்,
அறந்தாங்கி கோட் டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப்
பொறியியல்துறை, ராஜேந்திரபுரம், அறந்தாங்கி உபகோட்டத்திலும் மனுக்கள் அளித்து பதிவு
செய்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...